Advertisment

ரூ. 999 க்கு ஏர்டெலின் 4ஜி ஹாட்ஸ்பாட்... மாதம் ரீசார்ஜ் வெறும் ரூ. 399 மட்டும் தான்!

4ஜி இல்லாத இடங்களில் தானகவே 3ஜி நெட்வொர்க்கிற்கு மாறி தன்னுடைய இணைய சேவையை தொய்வின்றி ஏர்டெல் ஹாட்ஸ்பாட் வழங்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rs 399 Airtel 4G Hotspot

Rs 399 Airtel 4G Hotspot

Airtel 4G Hotspot Rs.399 plan : 10 டிவைஸ்களுக்கு ஒரே நேரத்தில் இணைய சேவையை வழங்கும் ஏர்டெலின் ஹாட்ஸ்பாட்டின் விலை ரூ. 999. இந்த ஹாட்ஸ்பாட்டுக்கு நீங்கள் ரீசார்ஜ் செய்ய வெறும் ரூ. 399 செலவழித்தால் போதும்.

Advertisment

இந்த வையர்லெஸ் டிவைஸை சார்ஜ் செய்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு செல்லலாம்.

1500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 6 மணி நேரத்திற்கு எந்த வித தொல்லையும் இல்லாமல் நீங்கள் இணைய சேவையினை அதுவும் 4ஜி ஸ்பீடில் பெற்றுக் கொள்ளலாம் என்பது கூடுதல் தகவல்.

Airtel 4G Hotspot Rs.399 plan :

ஆனால் ஜியோவின் ஹாட்ஸ்பாட்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த அளவிலான டிவைஸ்களை மட்டுமே இதன் மூலம் இயக்க முடியும்.

ஜியோ டிவைஸ் மூலம் ஒரே நேரத்தில் சுமார் 31 டிவைஸ்களுக்கு இணைய வசதியை தரலாம். அதே போன்று 4ஜி டிவைஸ்கள் மட்டுமே இதில் பயன்படுத்த இயலும்.

4ஜி இல்லாத இடங்களில் தானகவே 3ஜி நெட்வொர்க்கிற்கு மாறி தன்னுடைய இணைய சேவையை தொய்வின்றி ஏர்டெல் ஹாட்ஸ்பாட் வழங்கும்.  இந்த டேட்டா பேக் மூலமாக வாடிக்கையாளர்கள் மாதம் ஒன்றுக்கு 50ஜிபி டேட்டாவை பெற்றிட இயலும். கொடுக்கப்பட்ட டேட்டாவிற்கு அதிகமாக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பட்சத்தில் 80 Kbps என்ற வேகத்தில் இணையம் இயங்கும்.

மேலும் படிக்க : தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா ? ப்ரமோ கோட் உள்ளே!

Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment