ஏர்டெல் ரூ2,498 புதிய பிரீபெய்ட் திட்டம்: இது ஜியோ ரூ2,399-ல் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

Airtel new prepaid : புதிய ஏர்டெல் வருடாந்திர திட்டத்தின் கீழ், பயனர்களுக்கு தினமும் 2GB டேட்டா வீதம் ஆண்டு முழுவதும் கிடைக்கும்.

airtel, airtel annual plan, airtel rs 2498, jio rs 2399 plan, airtel rs 2498 vs jio rs 2399 plan, airtel new plans, airtel prepaid plans, jio prepaid plans, jio new plans, airtel new plan news, airtel new plan news in tamil, jio latest news, jio latest news in tamil
airtel, airtel annual plan, airtel rs 2498, jio rs 2399 plan, airtel rs 2498 vs jio rs 2399 plan, airtel new plans, airtel prepaid plans, jio prepaid plans, jio new plans, airtel new plan news, airtel new plan news in tamil, jio latest news, jio latest news in tamil

Reliance Jio vs Airtel: அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருப்பதை மனதில் வைத்து அதிகப்படியான டேட்டாவை குறைந்த விலைக்கு பயனர்களுக்கு கொடுக்கும் நோக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை சமீபத்தில் பல புதிய ரீசார்ஜ் திட்டங்களை நாட்டில் அறிமுகப்படுத்தின. அந்த வகையில் பாரதி ஏர்டெல் ரூபாய் 2,498/- க்கு ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு வருடாந்திர திட்டம் மேலும் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இது ஜியோவின் ரூபாய் 2,399/- திட்டத்தை போன்றது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இந்த புதிய ஏர்டெல் வருடாந்திர திட்டத்தின் கீழ், பயனர்களுக்கு தினமும் 2GB டேட்டா வீதம் ஆண்டு முழுவதும் கிடைக்கும். அதோடு எந்த நெட்வொர்க்குக்கும் அளவில்லாத அழைப்புகள் இலவசமாக செய்யும் வசதி, அதி வேக இணையம், தினமும் 100 குறுஞ்செய்திகள் ஆகியவையும் கிடைக்கும். இதன் பொருள் மொத்தமாக இந்த திட்டம் 730GB டேட்டாவை வழங்குகிறது. இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோவின் வருடாந்திர திட்டத்தை போன்றது.

ஏர்டெல் திட்டம் பல இதர அம்சங்களையும் பயனர்களுக்கு வழங்குகிறது அவை Zee5 premium சந்தா, கைபேசிக்கு Airtel Secure mobile security anti-virus solution, Airtel Xstream Premium சந்தா, Wynk Music prepaid சந்தா, இலவச Hellotunes, ரூபாய் 150 cashback on FASTag ஆகியவற்றையும், Shaw Academy யின் 28 நாட்கள் ஆன்லைன் கோர்ஸை இலவசமாக படிக்கும் வசதியையும் வழங்குகிறது.

ஏர்டெல் ரூபாய் 2,498 vs ஜியோ ரூபாய் 2,399: ஒப்பீடு

ரிலையன்ஸ் ஜியோ தனது ரூபாய் 2,399/- க்கான வருடாந்திர திட்டத்தை இரண்டு நாடுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் பயனர்கள் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2GB டேட்டாவை பெறுவார்கள். இதன் பொருள் மொத்தமாக இந்த திட்டம் 730GB டேட்டாவை முழு வருடத்துக்கும் வழங்குகிறது, ஏர்டெல்லை போல. கூடுதலாக ஜியோ எண்ணிலிருந்து ஜியோ எண்ணிற்க்கு இலவச அழைப்புகள் செய்யும் வசதி, ஜியோ எண்ணிலிருந்து வேறு நிறுவன எண்ணிற்கு 12,000 நிமிடங்கள் FUP குரல் அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 100 குறுஞ்செய்திகள் ஆகியவையும் வழங்கப்படுகிறது. மேலும் JioCinema முதல் JioSavaan வரை அனைத்து ஜியோ ஆப்களையும் பயனர்கள் அணுகும் உரிமையும் வழங்கப்படுகிறது. ஜியோவில் இருந்து வேரு நிறுவன எண்ணிற்கு இலவச குரல் அழைப்புகள் செய்யும் வசதியை ஜியோ வழங்கவில்லை. ஆனால் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவை ஜியோ உட்பட அனைத்து எண்களுக்கும் அளவில்லா அழைப்புகள் செய்யும் வசதியை வழங்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Airtel new plans airtel prepaid plans jio prepaid plans jio new plans

Exit mobile version