ஏர்டெலின் அசத்தல் ப்ரீபெய்ட் திட்டம்… ரூ. 4 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டு திட்டம் இலவசம்!

ஷா அக்காடெமி, வின்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்டீரிம் ப்ரீமியம் போன்ற ஆப்களை இலவசமாக சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம்.

Airtel new prepaid plans with free subscriptions : கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு விலைவாசி மற்றும் கட்டண ஏற்றங்களைப் பற்றி மட்டுமே பேசி வந்தது நெட்வொர்க் நிறுவனங்கள். தற்போது ஒரு வழியாக புதிய திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் என்று களம் இறங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம். ரூ. 279 மற்றும் ரூ.379 கட்டணங்களில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம். அதில் கூடுதல் சலுகைகளாக தெர்ட்-பார்ட்டி சப்ஸ்கிரிப்சன்கள் மற்றும் ஏராளமான சிறப்பு சலுகளைகளையும் வழங்கி வருகிறது.

ரூ. 279 ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம்

ரூ. 279க்கான திட்டம் உங்களுக்கு காப்பீட்டுத்திட்டம் ஒன்றை இலவசமாக வழங்குகிறது.

எச்.டி.எஃப்.சி லைஃபின் 4 லட்சத்திற்கான லைஃப் இன்ஸ்யூரன்ஸ் அதுவாகும்.

நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது ஏர்டெல். இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும்.

100 இலவச எஸ்.எம்.எஸ்களை அனுப்பிக் கொள்ள இயலும்.

மேலும் எந்த நெர்வொர்க்கில் இருக்கும் நம்பர்களுக்கும் போன் செய்து இலவசமாக பேசிக் கொள்ளலாம்.

ஷா அக்காடெமி, வின்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்டீரிம் ப்ரீமியம் போன்ற ஆப்களை இலவசமாக சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம்.

ஃபாஸ்டேக்கில் ரூ. 100 கேஷ்பேக் வசதியையும் இது பெற்றுத்தருகிறது.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Airtel new prepaid plans with free subscriptions life insurance cover

Next Story
மீண்டும் மாற்றப்பட்ட கேபிள் டிவி விதிமுறைகள்… உங்கள் பில் கட்டணம் குறைய வாய்ப்புகள் உண்டா?TRAI made new DTH and Cable TV regulation amendments
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com