Advertisment

ஏர்டெல் அறிவித்த புதிய ப்ரீப்பெய்ட் சலுகைகள்...

Airtel Rs 178 new prepaid recharge plan: 178 ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது இந்த சலுகைகள்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update

Airtel New Prepaid Recharge : ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய நெட்வொர்க்கில் இணையும் புதிய வாடிக்கையாளர்களுக்கு புதிய ஐந்து விதமான ப்ரீபெய்ட் சலுகைகளை அறிவித்திருக்கிறது. 178 ரூபாயில் ஆரம்பமாகும் இந்த ப்ரீப்பெய்ட் சலுகளைகள் 559 வரை தொடருகிறது. அன்லிமிட்டட் வாய்ஸ்கால்கள் மற்றும் மெசேஜ்கள் ஆகியவற்றை இந்த சலுகைகள் மூலமாக பெற்றிடலாம்.

Advertisment

ரூ. 178, ரூ. 229, ரூ. 344, ரூ. 495, மற்றும் ரூ. 559 என ஐந்து விதமான ப்ரீபெய்ட் சலுகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஏர்டெல். இந்த சலுகைகளை ஏர்டெல் மைஆப்பில் பெற்றுக் கொள்ளலாம்.

178 ரூபாய்க்கு செய்யப்படும் ரீசார்ஜ்ஜின் மூலமாக 1GB of 3G/4G டேட்டாவினை ஒரு நாளைக்கு பெற்றுக் கொள்ளலாம். 28 நாட்களுக்கு இருக்கும் இந்த சலுகையின் மூலம் நாளொன்றிற்கு 100 குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொள்ளலாம். அன்லிமிட்டட் கால் செய்யும் வசதிகளும் உள்ளன.

229 ரூபாய்க்கு செய்யப்படும் ரீசார்ஜ்ஜின் மூலமாக 1.4GB of 3G/4G டேட்டாவினை ஒரு நாளைக்கு பெற்றுக் கொள்ளலாம். 28 நாட்களுக்கு இருக்கும் இந்த சலுகையின் மூலம் நாளொன்றிற்கு 100 குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொள்ளலாம். அன்லிமிட்டட் கால் செய்யும் வசதிகளும் உள்ளன.

To read this article in English

344 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 2ஜிபி டேட்டாவினையும், அன்லிமிட்டட் போன் கால்களையும் 28 நாட்களுக்குப் பெற்றுக் கொள்ளலாம். 495 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு வேலிடிட்டியாகும். 559 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 90 நாட்கள் இந்த சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment