Advertisment

ஏர்டெல் ரூ.249 திட்டத்தில் இந்த மாற்றம் பற்றி தெரியுமா?

Airtel revises Rs249 prepaid recharge plan data Plans Jio VI Tamil News ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் சந்தாக்களுக்கான இலவச அணுகலை ரிலையன்ஸ் ஜியோ வழங்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Airtel revises Rs249 prepaid recharge plan data Plans Jio VI Tamil News

Airtel revises Rs249 prepaid recharge plan data Plans Jio VI Tamil News

Airtel revises Rs249 prepaid recharge plan data Plans Jio VI Tamil News : ஏர்டெல் தனது பட்ஜெட் ரூ.249 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவும், போட்டியாளர்களுக்குக் கடுமையான போட்டியை வழங்குவதற்காகவும் தற்போது திருத்தியுள்ளது. இந்த திட்டத்துடன், டெலிகாம் ஆபரேட்டர் இப்போது அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்குக் கூடுதல் 500MB இலவச தினசரி டேட்டாவை வழங்குகிறது. அதாவது 1GB டேட்டாவில் 50 சதவீதம். இது தவிர, ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மற்ற சலுகைகளையும் வழங்குகிறது.

Advertisment

திருத்தப்பட்ட ஏர்டெல் ரூ.249 திட்டம்

ரூ.249 ப்ரீபெய்ட் ஏர்டெல் திட்டம்,  தினசரி 1.5ஜிபி டேட்டாவுடன் வருகிறது மற்றும் இலவச 500எம்பி டேட்டாவுடன், வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு மொத்தம் 2ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். இந்த கூடுதல் டேட்டா சலுகை இந்த திட்டத்தில் மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் நிறுவனத்தின் ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் அதைப் பெறலாம். இந்த அப்டேட்டை முதலில் TelecomTalk கண்டறிந்தது.

இது தவிர, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் பெறுகிறது. அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு ஒரு மாதத்திற்கும், ஷா அகாடமி ஒரு வருடத்திற்கும், அப்பல்லோ 24|7 சர்க்கிள் (மூன்று மாதங்கள்), இலவச ஹலோடியூன்ஸ் சந்தா, விங்க் மியூசிக் மற்றும் ஃபாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் ஆகியவை மற்ற நன்மைகள். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் Vi ஆகியவை இந்த வரம்பில் என்னென்ன வழங்குகின்றன என்பதையும் பார்ப்போம்.

ஏர்டெல் vs ரூ.249 ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் மற்றும் ஜியோ இரண்டும் ஒரே டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு பலன்களை வழங்குகின்றன. ஜியோவின் ரூ.249 திட்டத்தில், நீங்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 2ஜிபி தினசரி டேட்டாவைப் பெறுவீர்கள். இந்த திட்டம் 28 நாட்கள் கால அவகாசத்துடன் வருகிறது.

டெலிகாம் ஆபரேட்டர் இதனுடன் எந்த அமேசான் சந்தாவையும் வழங்கவில்லை. ஆனால், நீங்கள் 20 சதவிகித ஜியோமார்ட் கேஷ்பேக்கைப் பெறுவீர்கள். இதை ஜியோமார்ட்டில் அல்லது அடுத்த ஜியோ ரீசார்ஜில் தள்ளுபடிகளைப் பெறப் பயன்படுத்தலாம். ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் சந்தாக்களுக்கான இலவச அணுகலை ரிலையன்ஸ் ஜியோ வழங்குகிறது. அவை ஜியோ பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

ஏர்டெல் vs Vi ரூ.249 ரீசார்ஜ் திட்டம்

வோடபோன் ஐடியாவும் (Vi) இதேபோன்ற திட்டத்தைக் கொண்டுள்ளது. ஆனால், தினசரி 1.5GB டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் "பிஞ் ஆல் நைட்" மற்றும் "வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்" அம்சங்கள் உட்பட பிற டேட்டா தொடர்பான சலுகைகளைப் பெறுவார்கள். அதாவது, 12:00 AM முதல் 6:00 AM வரை கூடுதல் செலவின்றி ஒருவர் இணையத்தைப் பயன்படுத்த முடியும். மற்ற அம்சம் என்னவென்றால், திங்கள்-வெள்ளி வரை பயன்படுத்தப்படாத டேட்டாவை சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பயன்படுத்த அனுமதிக்கிறது. மற்ற நன்மைகள், ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டங்களைப் போலவே உள்ளன. நீங்கள் ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகளைப் பெறுவீர்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jio Recharge Plan Vodafone Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment