ஏர்டெல் ரூ.49 ரீசார்ஜ் திட்டம் நிறுத்தப்படுகிறது!

Airtel revises Rs79 prepaid plan discontinues Rs49 recharge plan Tamil News 50 ஜிபி மொத்த டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு சலுகைகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Airtel revises Rs79 prepaid plan discontinues Rs49 recharge plan Tamil News
Airtel revises Rs79 prepaid plan discontinues Rs49 recharge plan Tamil News

Airtel revises Rs79 prepaid plan discontinues Rs49 recharge plan Tamil News : ஏர்டெல் தனது ரூ.79 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை திருத்தியுள்ளது. இது இப்போது இரட்டை டேட்டாக்களுடன் வாடிக்கையாளர்களுக்கு நான்கு மடங்கு அதிகமான வெளிச்செல்லும் நிமிடங்களை வழங்குகிறது. இந்த மாற்றம் சிறந்த இணைப்பு தீர்வுகளை வழங்குவதில் நிறுவனத்தின் கவனம் செலுத்துகிறது.

“நுழைவு நிலை ரீசார்ஜ்களில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் கணக்கு நிலுவை பற்றி கவலைப்படாமல் நீண்ட நேரம் இணைந்திருக்க முடியும்” என்று ஏர்டெல் கூறியுள்ளது. எனவே, நிறுவனத்தின் ப்ரீபெய்ட் பேக்குகள் இப்போது ரூ.79 ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டத்திலிருந்து தொடங்குகின்றன. இது 200MB டேட்டாவையும், ரூ.64 மதிப்புள்ள பேச்சு நேரத்தையும் தருகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

இது தவிர, ஏர்டெல் தனது ரூ.49 நுழைவு நிலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்தியுள்ளது. ரூ.49 ஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 38.52 மதிப்புள்ள பேச்சு நேரத்தையும், 100 எம்பி டேட்டாவையும் வழங்குகிறது. கொடுக்கப்பட்ட 100MB டேட்டா தீர்ந்ததும், பயனர்களுக்கு ஒரு எம்பிக்கு ரூ.0.50 வசூலிக்கப்படும். இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. இது, ஜூலை 29 முதல் அமலுக்கு வரும்.

தவிர, நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய ரூ.456 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது, 50 ஜிபி மொத்த டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு சலுகைகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 60 நாட்கள் செல்லுபடியாகும். டேட்டாவில் தினசரி வரம்பு கட்டுப்பாடு இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எனவே ஒரே நாளில் நீங்கள் விரும்பும் அளவுக்கு டேட்டாவை பயன்படுத்தலாம்.

இந்த திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான ஒரு மாத இலவச அணுகலும் அடங்கும். ரூ.456 ப்ரீபெய்ட் திட்டத்துடன், வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், இலவச ஹலோ டியூன்ஸ், விங்க் மியூசிக், ஒரு வருடத்திற்கான ஷா அகாடமி, அப்பல்லோ 24/7 வட்டம் மற்றும் ரூ.100 ஃபாஸ்டேக் கேஷ்பேக் உள்ளிட்ட ஏர்டெல் தேங்க்ஸ் சலுகைகளும் கிடைக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Airtel revises rs79 prepaid plan discontinues rs49 recharge plan tamil news

Next Story
வாட்ஸ்அப்: ஆண்ட்ராய்டில் மீடியா அமைப்புகளை மாற்றுவது எப்படி?How to change media settings on whatsapp Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express