ஏர்டெல், வோடபோன் ஐடியா வழங்கும் அட்டகாசமான புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் பற்றித் தெரியுமா?

Airtel Vodafone Idea announce new Prepaid Plans price validity benefits Tamil News இது 56 நாட்கள் திட்டத்திற்கும் 84 நாட்கள் திட்டத்திற்கும் இடையில் வரும். இதன் விலை முறையே ரூ.479 மற்றும் ரூ.719.

Airtel Vodafone Idea announce new Prepaid Plans price validity benefits Tamil News
Airtel Vodafone Idea announce new Prepaid Plans price validity benefits Tamil News

Airtel Vodafone Idea announce new Prepaid Plans price validity benefits Tamil News : இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா சமீபத்தில் அனைத்து பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைகளை 20-25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. என்றாலும், ஏர்டெல் இப்போது ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தைச் சேர்த்துள்ளது. அதே நேரத்தில் போட்டியாளரான வோடபோன் ஐடியா நான்கு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களைச் சேர்த்துள்ளது.

புதிய ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா திட்டங்கள் விலை, டேட்டா பலன்கள், அழைப்பு பலன்கள் மற்றும் செல்லுபடியாகும் தன்மை உள்ளிட்டவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.

ஏர்டெல் வழங்கும் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் அதன் புதிய ரூ.666 திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. இது இரண்டரை மாதங்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை தேடுபவர்களுக்கு வழங்குகிறது. ரூ.666 திட்டம் புதிய அளவுருக்களுடன் வருகிறது. இதில் ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்களும் அடங்கும்.

தினசரி பேலன்ஸ் தீர்ந்த பின்னும் டேட்டா தொடரும், ஆனால் 64kbps வேகத்தில் குறைக்கப்படும். பயனர்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களைப் பெறுவார்கள். இவை அனைத்தும் 77 நாட்கள் செல்லுபடியாகும். இது 56 நாட்கள் திட்டத்திற்கும் 84 நாட்கள் திட்டத்திற்கும் இடையில் வரும். இதன் விலை முறையே ரூ.479 மற்றும் ரூ.719.

வோடபோன் ஐடியாவின் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள்

வோடபோன் ஐடியா நான்கு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலை ரூ.155, ரூ.239, ரூ.666 மற்றும் ரூ.699. ஒவ்வொரு திட்டத்திலும் நீங்கள் பெறுவது இதோ.

Vi-ன் ரூ.155 திட்டம்: இந்த திட்டம் பயனர்களுக்கு 1ஜிபி டேட்டாவை (மொத்தம்) 24 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் (மொத்தம்) ஆகியவற்றை வழங்குகிறது.

Vi-ன் ரூ 239 திட்டம்: இந்த திட்டமானது பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 24 நாட்களுக்கு வழங்குகிறது.

Vi-ன் ரூ.666 திட்டம்: ஏர்டெல் ரூ.666 திட்டத்தைப் போலவே, இந்த திட்டமானது பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 1.ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 77 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுகிறது.

Vi-ன் ரூ.699 திட்டம்: இந்த திட்டமானது பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 3GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 56 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றைப் பெறும். கூடுதல் நன்மையாக, இந்த திட்டத்தில் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், Binge All Night, டேட்டா டிலைட்ஸ் ஆஃபர் மற்றும் Vi Movies மற்றும் TV-க்கான இலவச அணுகல் போன்ற அம்சங்களும் அடங்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Airtel vodafone idea announce new prepaid plans price validity benefits tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express