Advertisment

ஏர்டெல் Vs ஜியோ Vs வோடபோன்: ரூ.250 க்கு குறைவான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
airtel vs jio vs vodafone

airtel vs jio vs vodafone

இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது ப்ரீபெய்ட் திட்டத்துக்கான கட்டணன்ங்களை மாற்றியமைத்து சிலகாலமாகிறது. திட்டங்களுக்கான கட்டணங்கள் சற்றே கூடினாலும் அவற்றுக்கான பலன்கள் குறைந்துவிட்டன.

Advertisment

நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை...

வாடிக்கையாளார்கள் தொலைபேசியில் ஒரு அழைப்பை செய்வதற்கு ஜியோ IUC கட்டணத்தையும் கூட அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் ஒரு திட்டத்திற்க்குள் வாடிக்கையாளர் பெறும் நிமிடங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது.

99 கைப்பேசிகளை வைத்து கூகுள் ஆண்டவரையே கதற விட்ட ஜெர்மனி ஓவியர்

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் வழங்கும் 250 ரூபாய்கும் குறைவான திட்டங்களில் (plan) எது சிறந்த திட்டம் என்பதை பற்றி பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.249 திட்டம்

28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தில் கீழ் ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு தினசரி அதிவேக 1.5 ஜிபி டேட்டா, அளவில்லா அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வீதம் வழங்குகிறது.

வழக்கமாக வரும் இந்த பலன்கள் தவிர வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல்லின் சொந்த Wynk Music சேவைக்கு இலவச சந்தா, Airtel Xstream Premium ஆப்பில் உழ்நுழையும் உரிமம், ஷா கலைகூடத்தில் 4 வார இலவச பயிற்சி, FASTag ற்கு 150 ரூபாய்கான கேஷ்பேக் சலுகை, இலவச ஹெலோ டியூன் சேவை மற்றும் ஏர்டெல்லின் சொந்த ஸ்மார்ட் போன் ஆண்டி வைரஸ்சுக்கான சந்தா ஆகியவை வழங்கப்படுகிறது.

ஜியோ 249 திட்டம்

ஏர்டெல்லை போல ஜியோவும் தனது வாடிக்கையாளர்களுக்கு 249 ரூபாய்க்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இத்திட்டத்தில் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்களும் உண்டு. மேலும் தினசரி 2 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் அனைத்து ஜியோ டு ஜியோ அழைப்புகளும் இலவசமாகவும் ஜியோ அல்லாத மற்ற நிறுவன அழைப்புகளுக்கு 1000 FuP நிமிடங்களும் வழங்குகிறது. மேலும் JioMoney, JioTV போன்ற அனைத்து அப்ளிக்கேஷன்களுக்கும் உள்நுழையும் உரிமமும் இத்திட்டத்தில் உண்டு.

கூகுள் தேடலில் இனி உங்கள் மொபைல்போனை ரீசார்ஜ் செய்யலாம்

வோடபோன் 249

வோடபோன் 249 திட்டமும் ஏர்டெல்249 திட்டமும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே வருகிறது. தினமும் அதிவேக 1.5 ஜிபி டேட்டா, அனைத்து நிறுவனங்களுக்கும் அளவில்லா அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இவற்றுடன் Vodafone Play services மற்றும் ZEE5 ஆகியவற்றுக்கு வருடாந்திர சந்தாவில் சில சலுகைகளும் வழங்குகிறது.

Jio Airtel Vodafone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment