Advertisment

Airtel vs Jio Fiber vs ACT Fibre net: சென்னையில் பெஸ்ட் பிராட்பேண்ட் சேவை எது?

ரூ. 1000 கட்டணத்தில் ஏர்டெல், ஜியோ ஃபைபர், ஏ.சி.டி ஃபைபர்நெட் ஆகியவை வழங்கும் பிராட்பேண்ட் திட்டங்கள், சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
sangavi ramasamy
புதுப்பிக்கப்பட்டது
New Update
Airtel vs Jio Fiber vs ACT Fibre net: சென்னையில் பெஸ்ட் பிராட்பேண்ட் சேவை எது?

தொழில் நுட்பத்துறை வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக இன்டர்நெட் சேவை உலகம் முழுவதும் விரிவடைந்துள்ளது. நகரம் முழுவதும் குக் கிராமம் வரை இன்டர்நெட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்டர்நெட்யை மொபைல் டேட்டாவாகவும், பிராட்பேண்ட்டாகவும் பெறலாம். பிராட்பேண்ட் என்பது எதுவுமில்லை வைஃபை (Wifi) ஆகும்.

Advertisment

இந்தியாவில் பிராட்பேண்ட் வேகம் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. Ookla இன் சமீபத்திய அறிக்கைபடி, நவம்பர் 2022-இல் இந்தியாவின் நிலையான சராசரி பதிவிறக்க வேகம் கிட்டத்தட்ட 50Mbps ஆக அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. ஜியோ நிறுவனம் ரூ. 399 முதல் அன்லிமிடெட் இன்டர்நெட் டேட்டா சேவைகளை வழங்கி வருகிறது. மிகக் குறைந்த விலையில் பிராட்பேண்ட் திட்டங்கள் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். சென்னை, டெல்லி மற்றும் பெங்களூருவில் ரூ.1,000 விலையில் ஏர்டெல், ஜியோ ஃபைபர் மற்றும் ஏசிடி ஃபைபர்நெட் வழங்கும் சிறந்த பிராட்பேண்ட் திட்டங்கள் குறித்து இங்கு காண்போம்.

ரூ.1,000 கீழ் ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்கள்

ரூ.1,000 கட்டணத்தின் கீழ் ஏர்டெல் 4 பிராட்பேண்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது. இதற்கு அனைவருக்குமான திட்டம். சென்னை, பெங்களூரு, டெல்லியில் வசிப்பவர்களுக்கு மட்டும் அல்ல. ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்களின் விலை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும். வருடாந்திர அல்லது ஆறு மாத திட்டத்தைத் தேர்வுசெய்யதால் இன்ஸ்டலேசன் கட்டணம் முற்றிலும் இலவசம். மாதாந்திர திட்டம் பயன்படுத்துபவர்கள் இன்ஸ்டலேசன் கட்டணம் ரூ.1,000 செலுத்த வேண்டும். அனைத்து திட்டங்களிலும் வைஃபை ரவ்டர் (Wi-Fi router) இலவசமாக வழங்கப்படுகிறது.

ஏர்டெல் வழங்கும் குறைந்த விலை பிராட்பேண்ட் திட்டமான 'பேசிக்' மாதத்திற்கு ரூ. 499 மற்றும் 40 எம்பிபிஎஸ் வரை வேகத்தை வழங்குகிறது. அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் STD அழைப்புகள், 12 மாத ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்திற்கான சந்தா மற்றும் Wynk Music மற்றும் Apollo உள்ளிட்ட கூடுதல் சலுகைகளை வழங்குகிறது.

'ஸ்டாண்டர்ட்' திட்டம்

ஸ்டாண்டர்ட் திட்டமானது அன்லிமிடெட் காலிங் வசதியுடன் 100 எம்பிபிஎஸ் வேகத்தை வழங்குகிறது. மற்ற கூடுதல் சலுகைகளையும் கொண்டுள்ளது.

'Entertainment' திட்டம்

100 எம்பிபிஎஸ்ஸை விட அதிக வேகம் மற்றும் OTT சந்தாக்கள் பெற, ஏர்டெல்லின் 'Entertainment' திட்டத்தை தேர்வு செய்யலாம். 200 எம்பிபிஎஸ் வேகம், அன்லிமிடெட் காலிங் வசதி, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் மெம்பர்ஷிப், எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், அப்பல்லோ மற்றும் விங்க் பிரீமியம் ஆகியவற்றிக்கான சலுகைகளை மாதம் 999 ரூபாயில் பெறலாம்.

ரூ.1,000 கீழ் ACT ஃபைபர்நெட் திட்டங்கள்

ACT ஃபைபர்நெட் ரூ.1,000 கட்டணத்தின் கீழ் 3 மாதாந்திர திட்டங்களை கொண்டுள்ளது. ஏர்டெல் போலல்லாமல், நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து ACT ஃபைபர்நெட் திட்டங்களின் விலை மாறுபடும். நீங்கள் டெல்லி அல்லது சென்னையில் இருந்தால், 'ACT Welcome' திட்டம் ரூ. 749 பெறலாம். இதில் 50 Mbps டேட்டா வேகம் உள்ளது. பெங்களூரில் வசிப்பவர்கள் இதே விலையில் 40 Mbps டேட்டா வேகம் பெறுவார்கள்.

நீங்கள் அதிக டேட்டா வேகத்தை விரும்பினால், ACT சில்வர் ப்ரோமோ திட்டத்தை பயன்படுத்தலாம். இந்த திட்டத்தில் 150 Mbps வேகம் கிடைக்கிறது. டெல்லியில் ரூ.799 விலையில் இத்திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் Netflix Basic சலுகை வழங்கப்படுகிறது. இதே திட்டத்திற்கு சென்னையில் மாதம் ரூ.810 செலவாகும். பெங்களூரில் இத்திட்டம் இல்லை. அதற்குப் பதிலாக, ACT Fibernet ஆனது 'ACT Swift' என்ற திட்டத்தைக் கொண்டுள்ளது, இது 750GB டேட்டாவுடன் வருகிறது, 75 Mbps வேகம் மற்றும் மாதத்திற்கு ரூ.710 கட்டணமாகும்.

பெங்களூரு வாசிகள் 'ACT Rapid Plus' திட்டத்தையும் தேர்வு செய்யலாம். இது 100 Mbps வேகத்தை வழங்குகிறது மற்றும் 1000GB டேட்டாவுடன் வருகிறது.

ரூ. 1,000 கட்டணத்தில் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்கள்

ஏர்டெல்லைப் போலவே, ஜியோ ஃபைபர் திட்டங்களும் நாடு முழுவதும் ஒரே விலையில் கிடைக்கிறது. JioFiber மிகவும் குறைந்த விலையில் மாதம் 399 ரூபாயில் பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகிறது. 30 Mbps வேகம், அன்லிமிடெட் டேட்டா வசதி கொண்டுள்ளது. அதேபோல் 100 Mbps டேட்டா பெற ரூ.699 திட்டத்தை தேர்வு செய்யலாம்.

ஜியோ ஃபைபர் OTT சேவைகளைப் பெற அன்லிமிடெட் டேட்டா 150 Mbps வேகத்துடன் வரும் ரூ.999 திட்டத்தை பயன்படுத்தலாம். Amazon Prime மெம்பர்ஷிப், Disney+ Hotstar, Voot Select,Sony Liv, Zee5, Voot Kids, Sun NXT, Hoichoi, Universal+, Lionsgate Play, Discovery+, JioCinema, ShemarooMe, Eros ALTBalaji மற்றும் JioSaavn ஆகிய OTT சேவைகளை இலவசமாகப் பெறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Jio Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment