நியூ இயரை ஏர்டெல், ஜியோவின் அதிரடி டேட்டா ஆஃபர்களுடன் ஆரம்பியுங்கள்

ஏர்டெல் ரூ.799க்கு புதிய டேட்டா ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருநாளைக்கு 3.5 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு மொத்தம் 98 ஜிபி டேட்டாவை பெற...

ஏர்டெல் ரூ.799க்கு புதிய டேட்டா ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் ஒருநாளைக்கு 3.5 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு மொத்தம் 98 ஜிபி டேட்டாவை பெற முடியும்.

டேட்டா தவிர இந்த ஆஃபர் மூலம் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி கால் உள்ளிட்டவற்றையும் இலவசமாக பெற முடியும். ஒருநாளைக்கு 25 நிமிடங்களும், வாரத்திற்கு 1,000 நிமிடங்களும் இலவசமாக கால்ஸ் ஆஃபரை அனுபவிக்க முடியும். இதுதவிர, ஒருநாளைக்கு இலவசமாக 100 லோக்கல், எஸ்.டி.டி. இலவச எஸ்.எ.எஸ். அனுப்ப முடியும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.799க்கு, ஒருநாளைக்கு 3 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு 84 ஜிபி வழங்குகிறது. இதுதவிர அன்லிமிடெட் லோக்கல், எஸ்.டி.டி, ரோமிங், அன்லிமிடெட் எஸ்.எம்.எஸ். பேக் ஆகியவையும் இதில் அடங்கும். அதேபோல், ரூ.799க்கு ஏர்டெல் நிறுவனம் ஒருநாளைக்கு 3.8 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது.

ஏர்டெல் நிறுவனம் அதேபோல் ரூ.349-க்கு ஒருநாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி கால்ஸ், 100 இலவச எஸ்.எம்.எஸ். என 28 நாட்களுக்கு ஆஃபர் வழங்குகிறது. மேலும், ரூ.549க்கு ஒருநாளைக்கு 3ஜிபி டேட்டா வீத 28 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த ஆஃபரிலும், அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்.எம்.எஸ் ஆஃபரும் உண்டு.

இதுதவிர, ஏர்டெல் நிறுவனம் ரூ.509க்கு ஒருநாளைக்கு 1 ஜிபி டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்குகிறது. இதிலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்.டி.டி. கால்ஸ், ஒருநாளைக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ். ஆஃபர் உண்டு.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close