Advertisment

Amazon Fab Phone Fest : ஸ்மார்ட்போன்களுக்கு அளித்த தள்ளுபடியில் வாடிக்கையாளர்கள் செம ஹேப்பி அண்ணாச்சி!

ஒன்ப்ளஸ் 6டி போனின் விலை 37,999ல் இருந்து 4500 வரை தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது அமேசான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amazon Fab Phone Fest 2019, Apple phones on offer sale

Amazon Fab Phone Fest : ஸ்மார்ட்போன்களை மிகக் குறைந்த விலையில் வாடிக்கையாளர்கள் பெற வேண்டும் என்பதற்காகவே சிறந்த ஆஃபர்களை வெளியிட்டுள்ளது அமேசான். ஃபேப் போன் ஃபெஸ்ட் எனப்படும் இந்த தள்ளுபடித் திருவிழா ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை அமேசானில் நடைபெறுகிறது. இந்த இரண்டு நாட்களுக்காகத்தான் வாடிக்கையாளர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

Advertisment

ஒன்ப்ளஸ் முதல் ஐபோன்கள் வரை அனைத்திற்கும் தள்ளுபடி

ப்ரிமியம் போன்களான ஒன்ப்ளஸ், ஐபோன்களில் ஆரம்பித்து, பட்ஜெட் போன்களான ஹானர் ப்ளே வரைக்கும் அனைத்து வித போன்களுக்கும் சிறப்பு டிஸ்கௌண்ட் அளித்து வாடிக்கையாளர்களை மகிழ்வித்துள்ளது அமேசான் நிறுவனம்.

ஹானர், விவோ, ஓப்போ, ஆப்பிளின் ஐபோன்கள், ஒன்ப்ளஸ் 6டி, ரியல்மீ யு1, ஹானர் ப்ளே மற்றும் பல்வேறு போன்களை மிகவும் குறைவான விலையில் பெற்றிட உங்களால் இயலும்.

மேலும் எச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறப்பு சலுகையாக 10% கழிவினை அளித்துள்ளது அமேசான் நிறுவனம்.

விவோ நிறுவனத்தின் ஒய்83 போனுக்கு லோவஸ்ட் ப்ரைஸ் எவர் என்ற டேக்கையும், ஐபோன் எக்ஸ்ஆர் போனுக்கு ஃபர்ஸ்ட் டைம் ஆன் டிஸ்கவுண்ட் என்ற டேக்கையும் இணைத்துள்ளது அமேசான் நிறுவனம்.

ஒன்ப்ளஸ் 6டி போனின் விலை 37,999ல் இருந்து 4500 வரை தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது அமேசான்.

ஐபோன்களின் லேட்டஸ்ட் வரவான ஐபோன் எக்ஸ் எஸ், ஐபோன் எக்ஸ் எஸ் மேக்ஸ், மற்றும் ஐபோன் எக்ஸ் ஆர் போன்ற போன்களை பேடிஎம்மில் வாங்கினால் 12 ஆயிரம் ரூபாய் வரை சிறப்பு தள்ளுபடி என்று அறிவித்திருந்த நிலையில், இதன் தள்ளுபடி குறித்து அமேசான் எதுவும் குறிப்பிடவில்லை.

ஹானர் ப்ளே போன் ரூ.13,999க்கும், Honor 8X போன் ரூ.12,999க்கும், ஹானர் 8சி போன் ரூ.8,999க்கும், ஹானர் 7சி போன் - ரூ.8,499க்கும் விற்பனைக்கு வைக்கப்படுள்ளது.

அதே போன்று ரியல்மீ யு1, ஓப்போ எஃப்9 ப்ரோ, விவோ வி15 ப்ரோ, ஓப்போ எஃப்11 ப்ரோ, ஹுவாய் மேட் 20 ப்ரோ, ஹூவாய் யூ9, நோக்கியா 8.1 போன்ற போன்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று அறிவித்திருக்கிறது அமேசான்.

மேலும் படிக்க : டி.எஸ்.எல்.ஆர் கேமராவுக்கே சவால் விடும் 

Amazon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment