Amazon Prime Day Sale 2019 : அமேசான் ப்ரைம் டே-வில் அறிமுகமாகிறது ஒன்ப்ளஸ் 7 ப்ளூமிரர் வேரியண்ட்

Prime Day Launches : இது போன்றே ஆயிரக்கணக்கான டிவைஸ்களை 15 & 16 தேதிகளில் அறிமுகம் செய்கிறது அமேசான் நிறுவனம்.

Amazon Prime Day Sale 2019 OnePlus 7 Mirror Blue Smartphone : ஜூலை 15 மற்றும் 16 தேதிகளில் அமேசான் ப்ரைம் டே சேல் (Amazon Prime Day Sale) நடைபெற உள்ளது. இதில் ஸ்மார்ட்போன்கள் முதற்கொண்டு அனைத்து எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கும் தள்ளுபடி உண்டு. இந்த வருடம் புதிதாக 1000 ப்ரோடக்ட்டுகளை அறிமுகமும் செய்ய உள்ளது அமேசான். அப்படி அறிமுகம் ஆகிறது ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் 7 மிரர் ப்ளூ வேரியண்ட்.

மேலும் படிக்க : டிக்… டிக்… டிக்… மைல்கல்லை எட்ட இருக்கும் சந்திரயான் 2… துவங்கியது கவுண்ட்டவுன்!

Amazon Prime Day launches :  OnePlus 7 Mirror Blue சிறப்பம்சங்கள்

குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 855 ப்ரோசசர் கொண்டு இயங்குகிறது இந்த ஸ்மார்ட்போன். 6.41 இன்ச் ஆப்டிக் ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரை கொண்டுள்ளது. 2340×1080 பிக்சல்கள் ரெசலியூசனைப் பெற்றுள்ளது. 2.84GHz ஆக்டோ-கோர் ஸ்நாப்ட்ராகன் 855 ப்ரோசசர் பொருத்தப்பட்டுள்ளது.

கிராபிக்ஸ் யூனிட் – ஆட்ரெனோ 640. ஆண்ட்ராய் 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன் ஓ.எஸ். 9.5 ஸ்கின் இயங்கு தளத்தில் இயங்குகிறது.  3,700mAh பேட்டரி திறன் கொண்டவை. மிரர் க்ரே மற்றும் சிவப்பு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகிறது.  48 எம்.பி. ப்ரைமரி மற்றும் 5 எம்.பி. செகண்ட்ரி என இரட்டை பின்பக்க கேமராக்களையும், 16 எம்.பி. செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.

Amazon Prime Day launches :  OnePlus 7 Mirror Blue Price :  விலை : 6ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 32,999 ஆகும். இது போன்றே ஆயிரக்கணக்கான டிவைஸ்களை நாளை மற்றும் நாளை மறுதினம் விற்பனைக்கு அறிமுகம் செய்கிறாது அமேசான் நிறுவனம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

×Close
×Close