Advertisment

Amazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்!

Amazon Prime Day sale 2020: ஹவாய் சமீபத்தில் அதன் Y9s ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது

author-image
WebDesk
New Update
amazon prime day sale, best mobile discount during amazon prime day sale, honor 9x, vivo v19, oppo f15, oneplus 7t, oneplus 7t pro, huawei y9s, samsung galaxy m31s, redmi note 9, redmi note 9 pro, xiaomi mi 10, oneplus 8, oneplus 8 pro, oneplus nord, samsung galaxy s10, apple iphone 11

Amazon Prime Day mobile phones deal

Amazon Prime Day Sale august 6, mobile phones deal in amazon Tamil News: அமேசான் பிரைம் டே விற்பனை இன்று (ஆகஸ்ட் 6) தொடங்கி ஆகஸ்ட் 7 ஆம் தேதியுடன் முடிவடையும். இது ஒவ்வொரு ஆண்டும் அமேசான் வழங்கும் மிகப்பெரிய விற்பனையாகும், இந்த ஆண்டு நிறுவனத்திடமிருந்து எந்த வித்தியாசமும் எதிர்பார்க்கப்படவில்லை. விற்பனையின் போது, இது மொபைல் போன்கள் முதல் வீட்டு அலங்காரங்கள் வரையிலான பல தயாரிப்புகளை பல தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளில் வழங்கும்.

Advertisment

Amazon Prime Day Sale august 6: அமேசான் பிரைம் டே விற்பனை

அமேசான் பிரைம் டே விற்பனையின் போது தள்ளுபடி செய்யப்படும் பெஸ்ட் ஸ்மார்ட் போன் ஆப்ஷன்களை இங்கே பார்ப்போம்.

ஆப்பிள் ஐபோன் 11

ஆப்பிள் ஐபோன் தரவரிசையில், ஐபோன் 11 லேட்டஸ்ட் மாடலாகும். தற்போது ரூ.68,300 க்கு கிடைக்கும். அமேசான் பிரைம் டே விற்பனையின் போது, இந்த மொபைல் ரூ.59,900 விலைக்கு கூட கிடைக்கலாம். அப்படி கிடைக்கும் பட்சத்தில், இதுவொரு சிறந்த ஆஃபராகும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்10

சாம்சங் கேலக்ஸி எஸ் 10 மொபைல் ஒரு வருடம் பழமையானதாக இருக்கலாம், ஆனால் தற்போது வரை கிடைக்கக் கூடிய மாடல்களில் இது சிறந்த மொபைலாகும். அருமையான டிஸ்பிளே, பெஸ்ட் கேமரா மற்றும் சாம்சங் பே போன்ற அம்சங்களுடன் கிடைக்கிறது. விற்பனையின் போது, இந்த மொபைல் 9 மாத நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பத்துடன் ரூ .44,999 க்கு கிடைக்கும்.

Amazon Prime Day Sale august 6, mobile phones deal in amazon Tamil News- அமேசான் Amazon Prime Day Sale august 6 (Express Photo)

ஒன்பிளஸ் நோர்ட்

ஒன்பிளஸ் சமீபத்தில் தனது நோர்ட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது, சாதனத்தில் எந்த தள்ளுபடியும் இல்லை, இது வெளியீட்டு விலையில் மட்டுமே கிடைக்கும். இருப்பினும், பிரைம் டே விற்பனையை குறிக்கும் வகையில், ஒன்பிளஸ் 12 ஜிபி ரேம் / 256 ஜிபி சேமிப்பகத்துடன் வரையறுக்கப்பட்ட எடிஷன் ப்ளூ வேரியண்ட்டை ரூ .29,999 க்கு விற்க உள்ளது. ப்ளூ கலர் ஆரம்பத்தில் 8 ஜிபி ரேம் / 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு மட்டுமே கிடைத்தது. மேலும் 12 ஜிபி ரேம் / 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கிரே கலர் வேரியண்டில் மட்டுமே கிடைத்தது.

ஒன்பிளஸ் 8/8 புரோ

ஒன்பிளஸ் 8 சீரிஸ் தற்போது நல்ல விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போனாகும். விற்பனையின் போது, ஒன்பிளஸ் 8 ரூ .41,999 க்கு 9 மாதங்கள் நோ-காஸ்ட் ஈ.எம்.ஐ. மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ரூ .54,999க்கு 9 மாத நோ-காஸ்ட் ஈ.எம்.ஐ உடன் கிடைக்கும்.

Mi 10

சியோமி மி 10 முதன்மை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும், இந்த நிறுவனம் அதன் டாப் மொபைல் ஒன்றை நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் விற்பனையின் போது ரூ .49,999 க்கு ரூ .4,000 கூடுதல் பரிமாற்ற தள்ளுபடியுடன் கிடைக்கும்.

Amazon Prime Day Sale august 6, mobile phones deal in amazon Tamil News- அமேசான் Amazon Prime Day Sale august 6 (Express Photo)

ரெட்மி Note 9 / Note 9 புரோ

ரெட்மி நோட் 9 மற்றும் நோட் 9 ப்ரோ ஆகிய இரண்டும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களாகும். விற்பனையின் போது ரெட்மி நோட் 9 ரூ .11,999 மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ 13,999 ஆரம்ப விலையில் தொடங்கி கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி M31s

சாம்சங் கேலக்ஸி M31s சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன, இது பிரைம் டே விற்பனையின் போது முதல் விற்பனையாக இருக்கும். இதன் விலை 6 ஜிபி ரேம் / 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ .19,499 ஆகவும், 8 ஜிபி ரேம் / 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ .21,499 ஆகவும் தொடங்குகிறது.

Amazon Prime Day Sale august 6, mobile phones deal in amazon Tamil News- அமேசான் Amazon Prime Day Sale august 6 (Image: Samsung)

ஹவாய் Y9s

ஹவாய் சமீபத்தில் அதன் Y9s ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ .19,990. எக்ஸ்சேஞ் போனஸ் ரூ.1,500.

Amazon Prime Day Sale august 6, mobile phones deal in amazon Tamil News- அமேசான் Amazon Prime Day Sale august 6 (Image: Huawei)

ஒன்பிளஸ் 7டி / 7டி புரோ

ஒன்பிளஸ் 7டி மொபைலுக்கு இப்போது ஒரு வயது இருக்கலாம். ஆனால் இதன் சிறப்பம்சங்கள் தற்போதைய லேட்டஸ்ட் மொபைல்களுக்கு இணையானது. ஒன்பிளஸ் 7 டி ரூ .35,999 க்கு ரூ .2,000 எக்ஸ்சேஞ் தள்ளுபடியுடன் கிடைக்கும். அதேசமயம், ஒன்பிளஸ் 7 டி புரோ ரூ .43,999 க்கு ரூ.3,000 எக்ஸ்சேஞ் தள்ளுபடியுடன் கிடைக்கும்.

ஒப்போ எஃப் 15

ஒப்போ எஃப் 15 ஒரு நல்ல mid-range ஸ்மார்ட்போன். நல்ல செயல்திறன் மற்றும் பெஸ்ட் கேமராக்கள் கொண்டுள்ளது. விற்பனையின் போது மொபைல் ரூ .16,990 முதல் கிடைக்கும். சாதனத்தை வாங்கும் அனைவருக்கும் ரூ .1,999 விலையில் இலவச ஜோடி W31 வயர்லெஸ் இயர்போன்கள் கிடைக்கும்.

விவோ வி 19

விவோ வி 19 சமீபத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டது மற்றும் ஒரு நல்ல கேமரா கொண்ட மொபைலாகும். இந்த சாதனம் தற்போது ரூ.30,990 க்கு கிடைக்கிறது, இருப்பினும், விற்பனையின் போது இது ரூ .24,990 க்கு கிடைக்கும். மேலும், நிறுவனம் ரூ .2,500 கூடுதல் எக்ஸ்சேஞ் போனஸை வழங்குகிறது.

Amazon Prime Day Sale august 6, mobile phones deal in amazon Tamil News- அமேசான் Amazon Prime Day Sale august 6 (Express Photo)

ஹானர் 9 எக்ஸ்

ஹானர் சமீபத்தில் இந்தியாவில் 9 எக்ஸ் full-screen டிஸ்பிளே மற்றும் பாப்-அப் கேமராவுடன் அறிமுகப்படுத்தியது. இது பின்புறத்தில் 48 எம்பி டிரிபிள் கேமரா அமைப்பு மற்றும் 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. விற்பனையின் போது மொபைலின் விலை ரூ .15,490.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Amazon Prime
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment