Advertisment

இத்தனை வசதிகள் கொண்ட ஐபேட்-காக தான் இத்தனை நாள் வெய்ட்டிங்...

மார்ச் 21ல் வெளியாகிறது ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் மினி !

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Apple 10.5-inch iPad Air

Apple 10.5-inch iPad Air

Apple 10.5-inch iPad Air :   மார்ச் 25ம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் புதிய டிவைஸ்கள் வெளியாக உள்ளது. என்ன புதிதாக வெளிவர உள்ளது என்பதில் அனைவருக்கும் அதிக ஆர்வம் தொற்றிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், என்னென்ன டிவைஸ்கள் வெளியாக உள்ளன என்பதை அறிவித்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

Advertisment

ஆப்பிள் பென்சில் உதவியுடன் ஆப்பிள் ஐபேட் மினி மற்றும் 10.5 இன்ச் ஐபேட் ஏர் போன்ற டிவைஸ்கள் வெளியாக உள்ளன. அதே போல் அறிமுக விழாவில் குப்பர்டினோ டெட் நிறுவனம் புதிய ஸ்ட்ரீமிங் டிவி மற்றும் சப்ஸ்கிரிப்சன் சேவைகள் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாக உள்ளன.

Apple 10.5-inch iPad Air சிறப்பம்சங்கள் :

ட்ரூ ஒன் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இந்த டேப்ளட்டில் ஆப்பிளின் ஏ12 பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் பென்சிலின் உதவியுடன் உங்களுக்கு விருப்பமான வேலையை இந்த ஐபேடில் நீங்கள் செய்யலாம்.

6.1 எம்.எம். திக்னெஸ் கொண்டுள்ளது. இதன் எடை 1 பௌண்ட் ஆகும்.

8 எம்.பி. ரியர் கேமராவும், 7 எம்.பி. செல்ஃபி கேமராவும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் பேட்டரி லைஃப் 10 மணி நேரங்களாகும்

ஐ.ஓ.எஸ் 12ல் இயங்குகிறது

ஸ்பேஸ் கிரே, சில்வர், மற்றும் கோல்ட் ஆகிய நிறங்களில் வெளிவர உள்ளது

iPad Mini சிறப்பம்சங்கள்

ஐபேட் மினி 4ன் தொடர்ச்சியாக அதே சிரியஸில் வெளியாகிறது 7.9 இன்ச் ஐபேட் மினி.

இதிலும் ஏ12 பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய ஐபேட்கள் அனைத்தும் முதல் தலைமுறை ஆப்பிள் பென்சல்களுடன் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

8 எம்.பி. ரியர் கேமராவும், 7 எம்.பி. பேஸ் டைம் கேமராவும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

ஐ.ஓ.எஸ் 12ல் இயங்குகிறது

ஸ்பேஸ் கிரே, சில்வர், மற்றும் கோல்ட் ஆகிய நிறங்களில் வெளிவர உள்ளது

விலை

இந்த இரண்டு ஐபேட்களும் 64ஜிபி மற்றும் 256 ஸ்டோரேஜ் ஆப்சன்களுடன் கிடைக்கின்றன. 10.5 இன்ச் ஐபேட் ஏர் டேப்ளட் (வைஃபை வசதியுடன்) ரூ.44,900-ல் இருந்து ஆரம்பமாகிறது. வைஃபை மற்றும் செல்லூலார் மாடலின் விலை ரூ.55,900 ஆகும்.

ஐபேட் மினியின் விலை ரூ.34,900ல் இருந்து ஆரம்பமாகிறது. வைஃபை + செல்லுலார் மாடல் 45,900ல் துவங்குகிறது.

ஆப்பிள் பென்சிலின் விலை ரூ.8500

இந்த இரண்டு டிவைஸ்களிலும் ஃபேஸ் ஐடி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : ரூ.5000க்கு அறிமுகமாகும் சியோமியின் புதிய போன் !

Apple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment