ஆப்பிள் ஹோம்பாட் விலை அறிவிப்பு!

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்பிள் வோர்ல்ட்வைட் டெவலபர்கள் மாநாட்டில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஹோம்பாட் அறிமுகப்படுத்தப்பட்டது.

பெரும் எதிர்பார்பை ஏற்படுத்திய, ஆப்பிள் நிறுவனத்தின் ஹோம்பாட் ஸ்பீக்கரின் விலை குறித்த முழுவிபரம் வெளியாகியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்பிள் வோர்ல்ட்வைட் டெவலபர்கள் மாநாட்டில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஹோம்பாட் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் விலைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் இதன் விற்பனை தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஹோம்பாட் ஸ்பீக்கர் பிப்ரவரி 9 ஆம் தேதி துவங்குகிறது. இதன் முன்பதிவு, ஜனவரி 26 ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விலை அமெரிக்கா மதிப்பில் சுமார் 349 டாலர் ஆகும். (இந்திய மதிப்பில் ரூ.22,260) முதற்கட்டமாக ஆஸ்திரேலியா, லண்டன் மற்றும் அமெரிக்காவில் ஆப்பிள் ஹோம்பாட் விற்பனையை துவங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. வெள்ளை மற்றும் ஸ்பேஸ் கிரே என இரண்டு நிறங்களில் இந்த ஸ்பீக்கர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 7.0 உயரம், 2.5 கிலோ எடைக் கொண்ட இந்த ஹோம்பாட் ஸ்பீக்கரை குரல் மூலமாகவே இயக்க முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையான சிரி மூலம் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் ஹோம்பாட் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. இசையை ஒலிக்க வைக்க, செய்திகளை வாசிக்க, வீட்டில் இண்டர்நெட் மூலம் இயங்கும் சாதனங்களை ஹோம்பாட்டில் இணைத்து வாய்ஸ் கொடுத்து கட்டுப்படுத்த என பல வகைகளில் இந்த சாதனம் பயன்படும்.

இந்த சாதனத்தில் உள்ள கூடுதள அம்சம், தானாகவே ஒலியை அட்ஜஸ்ட் செய்யும். அத்துடன் துல்லியமான ஆடியோவை வழங்குகிறது. தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் ஆப்பிள் ஹோம்பாட் விற்பனை நடைபெறுகிறது. மூன்று நாடுகளை தவிர, மற்ற நாடுகளின் ஹோம்பார் ஸ்பீக்கர் குறித்த விற்பனை தேதியை ஆப்பிள் நிறுவனம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஹோம்பாட் விலை அறிவிப்பு!

×Close
×Close