Advertisment

புதிய ஆப்பிள் ஐபோன் 11, ஐபோன் 11 புரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஃபோட்டோ கேலரி..!

தற்போது அறிமுகமாகியுள்ள, ஐஃபோன் 11, ஐஃபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றின் படங்கள் இங்கே...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
apple I phone new launch

செவ்வாயன்று மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது: ஐஃபோன் 11, ஐஃபோன் 11 புரோ மற்றும் ஐஃபோன் 11 புரோ மேக்ஸ் ஆகியவற்றின் அறிமுக விழா குப்பெர்டினோவில் நடந்தது. ஐஃபோன் 11, ஐபோன் எக்ஸ்.ஆரின் வாரிசாகவும், ஐஃபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் முறையே ஐஃபோன் எக்ஸ்.எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ் ஆகியவற்றின் வாரிசுகளாகவும் இருப்பதால், இந்த முறை அதன் பெயரிடும் திட்டத்தை சிறிது மாற்றியமைத்துள்ளது ஆப்பிள். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: நந்தகோபால் ராஜன்)

apple I phone new launch ஆப்பிள் ஐஃபோன் 11-ன் அடிப்படை விலை ரூ .64,900, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 புரோ மேக்ஸ் முறையே ரூ .99,990 மற்றும் ரூ .1,09,990 எனத் தொடங்குகின்றன. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: நந்தகோபால் ராஜன்)

Advertisment

apple I phone new launch புதிய ஐqபோன்கள் அனைத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த ஏ 13 பயோனிக் ப்ராசசரால் இயக்கப்படுகின்றன. மொபைல் ஃபோனின் உள்ளே வைக்கப்படும் மிக சக்திவாய்ந்த ப்ராசசர் இதுவாகும். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: நந்தகோபால் ராஜன்)

apple I phone new launch ஐஃபோன் 11, ஐபோன் எக்ஸ்.ஆர்-ஐப் போன்று, 6.1 அங்குல எல்.சி.டி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அதே சமயம், ஐஃபோன் 11 ப்ரோ 5.8 இன்ச் டிஸ்ப்ளேவையும், ஐஃபோன் 11 புரோ மேக்ஸ் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. ஐஃபோன்களின் புரோ வகைகள் இரண்டும் சூப்பர் ரெடினா எக்ஸ்.டி.ஆர் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: நந்தகோபால் ராஜன்)

apple I phone new launch ஆப்பிள் ஐபோன் 11 கறுப்பு, வெள்ளை, லாவெண்டர், சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. புரோ வகை ஃபோன்கள் மிட்நைட் கிரீன், ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் கோல்ட் கலர்களில் கிடைக்கின்றன. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: நந்தகோபால் ராஜன்)

apple I phone new launch புதிய ஐபோன்கள் அனைத்திலும், அதன் ட்ரூடெப்த் சென்சாருக்கான வழிமுறைகள் உள்ளன. அதோடு ஃபேஸ் ஐடி 30 சதவீதம் மேம்படுத்தப்பட்டுள்ளது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: நந்தகோபால் ராஜன்)

apple I phone new launch இந்த புதிய ஐஃபோன்கள் அனைத்தும் செப்டம்பர் 27-ம் தேதி முதல் இந்தியாவில் கிடைக்கும். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: நந்தகோபால் ராஜன்)

Apple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment