Advertisment

புகைப்பட கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ...

புகைப்படக் கலைஞர்களைத் தாண்டியும் இந்த போன் விற்பனையில் வெற்றி பெற என்ன சிறப்பம்சங்களை கொண்டுள்ளது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Six Apple iPhone 12 models could come in 2020

Nandagopal Rajan

Advertisment

Apple iPhone 11 Pro Camera : அனைத்து போன்களிலும் தான் ப்ரோ ஆப்சன் இருக்கிறது. ஆனால் ஆப்பிள் போனில் ப்ரோ மோட் என்றால் அது என்னவாக இருக்கக் கூடும் என்ற ஆர்வம் அனைவர் மனதிலும் எழாமல் இல்லை. இது குறித்து, அந்நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் பில் சில்லார் குறிப்பிடுகையில் “ஐபோன் 11 ப்ரோ என்பது முழுக்க முழுக்க போட்டோகிராஃபி பிரியர்களுக்காகவே உருவாக்கப்பட்டது” என்று அறிவித்தார்.

புதிய ஐபோன்களில் என்னென்ன வசதிகள்- வீடியோ

Apple iPhone 11 Pro Camera சிறப்பம்சங்கள்

ஆனாலும் ஐபோன் 11-ல் இருக்கும் சிறப்பம்சங்களைத் தவிர வேறேதும் புதிய சிறப்பம்சங்கள் ஏதும் இல்லாத ஐபோன் 11 ப்ரோ 300 டாலர்கள் அதிகமாக இருப்பது ஏன் என்ற கேள்வியும் அனைவர் மனதிலும் எழத்தான் செய்கிறது.

மேலும் படிக்க : இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

இந்த விலைக்கும், போட்டோகிராஃபிக்குமான தொடர்பாக ஒரே புள்ளியில் நிற்பது இதன் ஏ13 பயோனிக் சிப் ஆகும். ஒரே நேரத்தில் 4 போன்களையும் இயக்கும் வகையிலும், ரெக்கார்ட் செய்யும் வகையிலும் ஒருங்கிணைக்கும் ஆற்றல் பெற்றது இந்த பயோனிக் சிப். இந்த ஐபோனை பயன்படுத்தி நீங்கள் நேரடியாக ஒரு படத்தை எடுக்க இயலும். அதற்காக ஃப்ள்மிக் என்ற ஒரு செயலியும் கூடவே கிடைக்கிறது.

publive-image

சாம்சங் மற்றும் ஒன்ப்ளஸ் நிறுவனங்களும் கூடத்தான் மூன்று கேமராக்களை பின்பக்கம் கொண்டுள்ளது. ஆனால் அவையாவும் புகைப்படக்கலையை அடுத்த தரத்திற்கு எடுத்தும் செல்லும் வகையில் இல்லை. ஆனால் இந்த ஐபோனோ கம்யூடேசனல் போட்டோகிராஃபிக்காகவே உருவாக்கப்பட்டது.

மேலும் படிக்க : ஆப்பிள் லேட்டஸ்ட் ஐபோன்கள் விலை என்ன தெரியுமா? அம்மாடியோவ் இதெல்லாம் கட்டுபடியாகாது…

இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் உங்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்காக டீப் ஃபூஷன் டெக்னாலஜி (Deep Fusion technology) என்ற ஒரு தொழில்நுட்பமே உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 9 புகைப்படங்களை ஒன்றாக இணைக்க முடியும். அதில் கிடைக்கும் டீடெய்ல்கள் மிகவும் துல்லியமானவை. டெக்‌ஷர்கள், ஷேட்கள் எல்லாமே அபாரம்.

ஷட்டர் பட்டனை அழுத்துவதற்கு முன்பாகவே 4 புகைப்படங்கள் ஒரு ஷாட்டின் போது எடுக்க்கப்படும். பின்னர் 5 புகைப்படங்கள் என்று வரும் போது அது லாங் எக்‌ஷ்போஷர் இமேஜாக துல்லியமாக வெளியாகும். இதன் மூலம் 24 மில்லியன் பிக்சல்கள் கொண்ட புகைப்படங்களை எடுக்க இயலும்.

சில்லார் இப்படி கூறினாலும், சாஃப்ட்வேர் அப்கிரேட் வந்த பின்பு தான் முழுமையாக இது குறித்து நம்மால் கருத்து கூற இயலும். முழுக்க முழுக்க ப்ரொஃபஷ்னல்களுக்காக உருவாக்கப்பட்டது என்றாலும் யாரும் வாங்கி புகைப்படங்களை எடுத்து மகிழலாம். குறிப்பாக இதில் இருக்கும் நைட் மோட் வேற லெவல். நீங்கள் இந்த செட்டிங்க்ஸை ஆன் செய்துவிட்டால் போதும், எப்போது சரவுண்டிங் வெளிச்சம் குறைவாக இருக்கிறதோ அப்போது ஆட்டோமேட்டிக்காக செயல்பட்டு சிறப்பான புகைப்படங்களை நமக்கு அளிக்கிறது.

Iphone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment