Advertisment

ஆச்சரிய அம்சங்களுடன் ஆப்பிள் ஐபோன் 12: ரிலீஸ் எப்போன்னு பாருங்க!

வழக்கமாக இதுபோன்ற டேக்லைன்களில் ஆப்பிள் சில ரகசிய குறிப்புகளைக் கொண்டிருக்கும்.

author-image
WebDesk
New Update
Apple Iphone 12 tamil news

Apple Iphone 12 tamil news

Apple Iphone 12 Launch event: ஆப்பிள் ஐபோன் 12 வெளியீட்டு நிகழ்வு: இந்த ஆண்டின் இரண்டாவது மாபெரும் நிகழ்வுக்குத் தயாராகி வருகிறது ஆப்பிள். அக்டோபர் 13-ம் தேதி ஓர் விர்ச்சுவல் நிகழ்விற்காக “ஹாய், ஸ்பீட்” என்ற டேக் லைனோடு கடந்த செவ்வாய்க்கிழமை அழைப்பிதழ்களை அனுப்பியது நிறுவனம். இந்த நிகழ்வு தொழில்நுட்ப நிறுவனங்களின் வளாகத்தில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரிலிருந்து ஒளிபரப்பப்படும். இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு இந்த நிகழ்வு தொடங்கும்.

Advertisment

சிறிய ஹோம் பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர், over-ear ஹெட்ஃபோன்கள், முற்றிலும் புதிய ஆப்பிள் டிவி ஸ்ட்ரீமிங் பாக்ஸ் மற்றும் Tile-like இருப்பிட கண்காணிப்பு சாதனம் ஆகியவை ஆப்பிள் ஐபோன்களின் புதிய வரிசையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஹாய், ஸ்பீடு’ டேக்லைன் எதைக் குறிக்கிறது என்பதில் ஏற்கெனவே ஏராளமான ஊகங்கள் உள்ளன. வழக்கமாக இதுபோன்ற டேக்லைன்களில் ஆப்பிள் சில ரகசிய குறிப்புகளைக் கொண்டிருக்கும். இந்த முறை, திரையில் அதிக புதுப்பிப்பு விகிதத்துடன் அதிவேகமான A14 ப்ராசசர் உள்ளடக்கிய 5G-ஐ நோக்கி இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அழைப்பில் உள்ள தங்க மோதிரங்கள் புதிய தொலைபேசி வைத்திருக்கக்கூடிய கேமராக்களின் அடையாளமாக இருக்கலாம்.

இந்த அக்டோபர் நிகழ்வு இந்தாண்டின் ஆப்பிளின் இரண்டாவது அறிவிப்பு. கடந்த மாதம், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மற்றும் புதிய ஐபாட் ஏர் அறிமுகத்திற்காக ஒரு மணி நேர நிகழ்வை ஆப்பிள் அரங்கேற்றியது. அப்போது, வரவிருக்கும் ஐபோன் 12 பற்றி எந்தவித அறிக்கையும் ஆப்பிள் வெளியிடவில்லை.

இந்த அக்டோபர் 13-ம் தேதி ஆப்பிள் நிகழ்வு பெரும்பாலும் ஐபோன் 12-ஐ முன்னிலைப்படுத்தும். ஏற்கெனவே அடுத்த ஜெனரேஷன் ஐபோன் வருவதற்குச் சற்று தாமதமாகும் என்பதை ஆப்பிள் உறுதிப்படுத்தியுள்ளது. “சில வாரங்களுக்குப் பிறகு ஐபோன்கள் கிடைக்கும்” என்று நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி லூகா மேஸ்திரி கடந்த ஜூலை மாதம் கூறினார். இதற்கு முன் ஏற்கெனவே கலிஃபோர்னியாவில் ஐபோன் வெளியீடு தாமதமானது. 2017-ம் ஆண்டு நவம்பரில்தான் ஐபோன் எக்ஸ் அங்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு, 5.4 அங்குல ஐபோன் 12, 6.1 அங்குல ஐபோன் 12 மேக்ஸ், 6.1 அங்குல ஐபோன் 12 ப்ரோ, மற்றும் 6.7 அங்குல ஐபோன் 12 ப்ரோ உள்ளிட்ட நான்கு புதிய ஐபோன் மாடல்களை ஆப்பிள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நான்கு ஐபோன் மாடல்களும் மேம்பட்ட வடிவமைப்புகள், புதிய A14 ப்ராசசர், சிறிய நாட்ச் மற்றும் சிறந்த கேமராக்களைக் கொண்டுள்ளன என கூறப்படுகிறது.

ஐபாட் ப்ரோ போலவே, தட்டையான விளிம்புகளுடன் கூடிய பாக்ஸியர் வடிவமைப்பை ஐபோன்12 கொண்டிருக்கும் என்ற வதந்தி உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் 5 ஜி இணைப்பை ஆதரிக்கும் முதல் சாதனம் ஐபோன் 12-ஆக இருக்கலாம். கூடுதலாக, ப்ரோ வரிசையில் ஐபோன் 3D டெப்த் மேப்பிங் திறன்களைக் கொடுக்கும் புதிய LiDAR சென்சார் இதில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Iphone Apple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment