Advertisment

ஆப்பிள் ஐபோன் 13 இவ்வளவு கம்மி விலையா? ஐபோன் 12-ஐ விட குறைவு

இந்த ஐபோன் ஃபிளிப்கார்ட் விற்பனை தளத்தில் ரூ. 56,990க்கு கிடைக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Apple iPhone 13 cheaper than Apple iPhone 12 iPhone 13 mini

Flipkart Big Billion Days sale 2022: வட இந்தியாவில் நவராத்திரி கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. இந்தப் பண்டிகை தென்னிந்தியாவில் மைசூரு மற்றும் குலசேகரப்பட்டிணத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்தப் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஆன்லைன் விற்பனை தளங்கள் கண்கவர் சலுகைகளை அறிவித்துள்ளள. இந்த நிலையில், Apple iPhone 12ஐ விடவும், Apple iPhone 13 விலை குறைந்து காணப்படுகிறது.

Advertisment

இந்த ஐபோன் ஃபிளிப்கார்ட் விற்பனை தளத்தல் ரூ. 56,990க்கு கிடைக்கிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கடந்த ஆண்டு பிளிப்கார்ட் விற்பனையில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களில் ஒன்றான 128 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய Apple iPhone 12 தற்போது ரூ.58,990 ஆக உள்ளது.

அந்த வகையில், ஆப்பிள் ஐபோன் 13, ரூ.56,990 விலையில் ஃபிளிப்கார்ட் இகாமர்ஸ் தளத்தில் விற்பனையில் உள்ளது.

256 ஜிபி மற்றும் 512 ஜிபி சேமிப்பு கொண்ட ஸ்மார்ட்போன்களின் மற்ற இரண்டு வகைகளின் விலை முறையே தற்போது ரூ.66,990 மற்றும் ரூ.86,990 ஆக உள்ளது.

ஆப்பிள் ஐபோன் 13 கடந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மற்றும் மினியுடன் ரூ.79,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆப்பிள் ஐபோன் 13 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் இது நிறுவனத்தின் முதன்மையான ஏ15 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Iphone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment