ஆப்பிள் ஐபோன் XS, XS மேக்ஸ், ஐபோன் XR: 'ஐஇதமிழ்' ஸ்பெஷல் வீடியோ

ஐபோன் XS 5.8 இன்ச் ஸ்க்ரீன், ஐபோன் XS Max 6.5 இன்ச் ஸ்க்ரீன் என வடிவமைக்கப்பட்டுள்ளது

ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR என அழைக்கப்படும் மூன்று மாடல்களில் பல்வேறு புதிய அம்சங்களுடன், ஆப்பிள் சாதனங்களில் முதல் முறை அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் முறையே 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் 458PPI சூப்பர் ரெட்டினா HDR டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த டிஸ்ப்ளே டால்ஃபி விஷன், ஹெச்.டி.ஆர். 19 மற்றும் 120Hz டச்-சென்சிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் புதிய ஐபோன்களில் முதல் முறையாக டூயல் சிம் சப்போர்ட் வசதி டூயல் ஸ்டான்ட்-பை இசிம் மூலம் வழங்கப்படுகிறது. எனினும் சீனாவில் மட்டும் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படுகிறது.

இந்த புதிய ஐபோன் ஆப்பிள் ஏ12 பயோனிக் 7என்.எம். சிப்செட் மூலம் இயங்குகிறது. இது, முந்தைய ஏ11 பிராசஸரை விட 15% வேகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6-கோர் சி.பி.யு. கொண்ட புதிய சிப்செட் 40% குறைந்த மின்சக்தியை பயன்படுத்துகிறது.

இதனால் ஐபோனின் பேட்டரி பேக்கப் முந்தைய மாடல்களை விட அதிக நேரம் கிடைக்கும். புதிய ஐபோன் XS மாடலில் உள்ள ஃபேஸ் ஐடி அம்சம் முந்தைய தொழில்நுட்பத்தை விட வேகமாகவும், அதிக பாதுகாப்பாகவும் இருக்கிறது.

ஐபோன் XS மற்றும் XS Max மாடல்கள் கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் Xன் அப்கிரேட்டாக வெளியிடப்பட்டது. ஐபோன் XS 5.8 இன்ச் ஸ்க்ரீன், ஐபோன் XS Max 6.5 இன்ச் ஸ்க்ரீன் என வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐபோன் XS சீரிஸ் முதற்கட்டமாக 30 நாடுகளில் கிடைக்கும். இவற்றுக்கான முன்பதிவு செப்டம்பர் 14-ம் தேதி துவங்கி, விற்பனை செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவில் இவற்றின் விலை முறையே ரூ.99,990 மற்றும் ரூ.1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன் கோல்டு, சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. ஐபோன் XS விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.71,813) முதல் துவங்குகிறது. ஐபோன் XS மேக்ஸ் விலை 1,099 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.79,001) முதல் துவங்குகிறது.

மேலும் படிக்க: iPhone XS, iPhone XS Max launch: உங்கள் சந்தேகங்களுக்கான பதில்!

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close