X

Apple WWDC 2019 நிகழ்வில் வெளியிடப்பட்ட ஓ.எஸ்.களின் முக்கியமான அப்டேட்கள் என்னென்ன ?

ஆப்பிள் புக்ஸ், கால்குலேட்டர், வாய்ஸ் மெமோக்கள் என புதிய ஆப்களை ஆப்பிள் வாட்ச்கள் பெற்றுள்ளன.

Apple WWDC 2019 Apple launched watchOS 6, iOS 13 : அமெரிக்கா, கலிஃபோர்னியாவில் உள்ள சென் ஜோன்ஸ் பகுதியில் நேற்று ஆப்பிள் நிறுவனத்தின் வேர்ல்ட் வைட் டெவலப்பர் மாநாடு நடத்தப்பட்டது. அதில் அந்நிறுவத்தின் ஒவ்வொரு டிவைஸ்களுக்கும் ஏற்றவாறு புதிய இயங்குதளங்களின் அப்டேட்கள் வெளியாகின.

அந்நிறுவனத்தின் டிம் குக் மெக்எனர்ஜி கன்வென்ஷனல் செண்டரில் இந்த புதிய இயங்குதளங்களை வெளியிட்டார். மேலும் புதிதாக மேக் ப்ரோ லேப்டாப்பையும், 32 இன்ச் 6கே எக்ஸ்டர்நெல் மானிட்டரையும் வெளியிட்டார் அவர்.

Apple WWDC 2019 Apple launched watchOS 6, iOS 13

ஆப்பிள் வாட்ச்களுக்கான ஓ.எஸ். வெர்ஷன் 6 நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. வாட்ச்களுக்கான புதிய ஃபேஸ்கள் அறிமுகம் செய்யபப்ட்டன. க்ரேடியண்ட் ஃபேஸ் ( Gradient face ), நியூமரல்ஸ் ஃபேஸ் (Numerals face), டிஜிட்டல் ஃபேஸ் (Digital face) மற்றும் கலிஃபோர்னியா டையல் ஆகியவை இந்த முறை வாட்ச்களின் திரைகளாக அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

வாட்ச் ஓ.எஸ்.சில் ஆப்களுக்கான ஸ்டோரேஜ் அதிகமாக உள்ளது. மேலும் அனைத்து செயலிகளும் ஆப்பிள் போன்களை சார்ந்திராமல் தானாக இயங்கக்கூடியவை.  ஆப்பிள் புக்ஸ், கால்குலேட்டர், வாய்ஸ் மெமோக்கள் என புதிய ஆப்களை ஆப்பிள் வாட்ச்கள் பெற்றுள்ளன.

மேலும் படிக்க : Apple WWDC 2019 iOS 13 : ஐபோன்கள் மற்றும் ஐபேட்களுக்காக உருவாக்கப்பட்ட இயங்குதளம்… சிறப்பம்சங்கள் என்னென்ன?

Cycle Track

இந்த வாட்ச்களில் நீங்கள் உங்களின் குரல் மூலம் கமெண்ட்கள் கொடுத்து இயக்க வைக்கவும் முடியும். மேலும் ஹெல்த் கேர் மற்றும் ஆக்டிவிட்டி ஆகியவற்றை அறிந்துகொள்ளவும் இது உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.  பெண்களுக்காக சைக்கிள் ட்ராக்கிங் என்ற ஒரு புதிய அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பெண்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சி காலத்தை கண்காணித்து அதற்கு ஏற்றார் போல் தங்களை கவனித்துக் கொள்ளவும் இயலும்.

உங்களின் பழைய ஹெல்த் தரவுகள் அனைத்தையும் சேமித்து வைக்கும் இந்த ஆப்பிள் போன், உங்களின் கடந்த 90 நாட்களுக்கான ஹெல்த் ஆக்ட்விட்டி எப்படி இருந்தது என்பதை ஸ்க்ரீன்ஷாட்டாக உங்களுக்கு காட்டும்.

Apple WWDC 2019: iPad OS

ஐபேட்களுக்கான ஓ.எஸ். நேற்று அறிமுகமானது. இதில் கஸ்டமைஸிபிள் ஹோம் பேஜ், சிறந்த ஃபைல் மேனேஜ்மெண்ட், ஃபுல் டெஸ்க்டாப் க்ளாஸ் ப்ரௌசிங் போன்ற அனைத்து செயல்பாடுகளையும் மேம்படுத்திக் கொடுத்துள்ளது இந்த அப்டேட்.

Apple WWDC 2019: New Mac Pro

ஆப்பிள் மேக் ப்ரோ மாற்றும் புதிய ஆப்பிள் ப்ரோ டிஸ்பிளே இரண்டும் நேற்று வெளியானது. முழுக்க முழுக்க ப்ரோ பயனாளிகளுக்காக வழங்கப்பட்ட புதிய டிவைஸ் இதுவாகும். செவ்வக வடிவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மேக் ப்ரோவில் 28 கோர் இண்டெல் சியான் சி.பி.யூ பொறுத்தப்பட்டுள்ளது. 300 வாட்ஸ் பவர், 1.5டிபி சிஸ்டம் மெமரி ஆகியவற்றை இந்த மேக் ப்ரோ பெற்றுள்ளது.

Apple WWDC 2019: iOS 13

எதிர்பார்த்ததைப் போல் வைட் டார்க் மோட் இந்த ஓ.எஸ்.சில் அப்டேட்டாகி உள்ளது. ஆப்பிள் மியூசிக், நோட்ஸ், மெசேஜ்கள், போட்டோஸ், காலெண்டர் போன்ற முதல்நிலை ஆப்கள் அனைத்திலும் இந்த டார்க் மோட் சப்போர்ட் ஆகும்.

ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த ஆப்கள் அனைத்தும் முன்பை விட இரண்டு மடங்கு அதிக வேகத்துடன் செயல்படும். அதே போன்று ஃபேஸ் ஐடியும் 30% அதிக வேகத்தில் இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் மேப்களிலும் பெரிய அளவில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 2019ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் இந்த ஆப் அடுத்த ஆண்டில் உலக நாடுகள் முழுவதும் பயன்பாட்டிற்கு வர உள்ளது. போட்டோ ஆப்களில் வீடியோவை ரொட்டேட் செய்யும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹோம்பாட் மூலமாக உங்கள் ஐபோனிற்கு மியூசிக், போட்காஸ்ட் மற்றும் போன் கால்களை ட்ரான்ஸ்ஃபர் செய்யும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் ஸ்பீக்கர் லைவ் ரேடியோ சப்போர்ட்டினை பெறுகின்றது. உலகில் உள்ள 1 லட்சத்திற்கும் மேலான ரேடியோ சேனல்களின் ஒலிபரப்பினை நீங்கள் ஸிரியிடம் விண்ணப்பித்து கேட்டுக் கொள்ளலாம்.

Web Title:

Apple launched watchos 6 ios 13 ipad os at wwdc

Next
Show comments
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.