Advertisment

ஆசஸ் சென்போன் 4 செல்ஃபி & சென்போன் 4 செல்ஃபி புரோ அறிமுகம்!

ஆசஸ் சென்போன் 4 செல்ஃபி மற்றும் சென்போன் 4 செல்ஃபி புரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Asus, Asus Zenfone 4 Selfie Pro, Zenfone 4 Selfie dual camera, Zenfone 4 Selfie,

ஆசஸ் சென்போன் 4 செல்ஃபி மற்றும் சென்போன் 4 செல்ஃபி புரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடும்படியாக சென்போன் 4 செல்ஃபி மாடலானது இரண்டு வகைகளில் வெளிருகிறது. சிங்கிள் செல்ஃபி கேமரா கொண்டவை ( ZB553KL மாடல்), மற்றொன்று இரண்டு செல்ஃபி கேமரா கொண்ட சிறப்பம்சத்தை(ZD553KL மாடல்) பெற்றது. சென்போன் 4 செல்ஃபி மாடல்கள் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருக்கும் நிலையில், சென்போன் 4 செல்ஃபி புரோ ஸ்மார்ட்போனானது மிட்-ரேன்ச் ஸ்மார்ட்போனாகும். ஆசஸ் நிறுவனத்தின்  இந்த  சென்போன்கள், செப்டம்பர் 21-ம் தேதி பிரத்யேகமாக ஃபிளிப்கார்டு ஆன்லைன் வணிகதளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. இதேநாளில் தான் ஃபிளிப்கார்டில் “பிக்பில்லியன் டே சேல்ஸ்” தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ஆசஸ் சென்போன் 4 செல்ஃபி புரோ (Asus Zenfone 4 Selfie Pro)

  • 5.5 இன்ச் டிஸ்ப்ளே(Full HD AMOLED)
  • ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளம்.
  • 154.02 x 74.83 x 6.85 மி.மீ, 147 கிராம் எடை கொண்டது.
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ப்ராசஸர்.
  • 4ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ்(மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் 2 டி.பி வரை அதிகரிக்க முடியும்)
  • 12 எம்.பி + 12 எம்.பி என்ற இரண்டு டுயல் கேமரா வசதியை இந்த ஆசஸ் சென்போன் 4 செல்ஃபி புரோ ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.
  • 3000mAh பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்சிங் வசதி

ஆசஸ் சென்போன் செல்ஃபி புரோ ஸ்மார்ட்போன்(Asus ZenFone 4 Selfie Pro) ரூ.23,999 என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஆசஸ் சென்போன் செல்ஃபி புரோ ஸ்மார்ட்போன்(Asus ZenFone 4 Selfie Pro) சன்லைட் கோல்டு, ரஃப் ரெட், டீப்சீ ப்ளாக் ஆகிய மூன்று நிறங்களில்(Sunlight Gold, Rouge Red, and Deepsea Black) வெளிவருகிறது.

ஆசஸ் சென்போன் 4 செல்ஃபி Asus Zenfone 4 Selfie (ZD553KL)

  • 5.5 இன்ச் ஃபுல் எச்.டி டிஸ்பிளே
  • 20 எம்.பி மற்றும் 8 எம்.பி என டுயல் செல்ஃபி கேமரா சிறப்பம்சம் கொண்டது. இதேபோல, 16 எம்.பி ரியர் கேமராவையும் கொண்டுள்ளது.
  • 155.4 x 75.2 x 7.5 மி.மீ சைஸ் மற்றும் 165 கிராம் எடை.
  • 4 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி ஸ்டோரேஜ்(மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் 2.டிவி வரை அதிகரிக்கலாம்)
  • 3000mAh பேட்டரி திறன் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜ் வசதி.

ஆசஸ் சென்போன் 4 செல்ஃபி (ZenFone 4 Selfie ) ரூ.14,999 என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. ப்ரோ  போன்று தான் இந்த மாடலும் மூன்று நிறங்களில் வெளிவருகிறது.

ஆசஸ் சென்போன் 4 செல்ஃபி (Asus Zenfone 4 Selfie)

  • 5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
  • ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளம்
  • 155.66 x 75.9 x 7.85 மி.மீ மற்றும் 144 கிராம் எடை
  • ஆக்டா-கோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 ப்ரைசஸர்
  • 3 ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி ஸ்டோரேஜ்(மைக்ரா எஸ்.டி கார்டு மூலமாக 2டி.பி வரை அதிகரித்துக் கொள்ள முடியும்)
  • 13 எம்.பி ரியர் கேமரா மற்றும் 13 எம்.பி செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது.
  • 3,000mAh பேட்டரி திறன் மற்றும் ஃபாஸ்ட்ட சார்சிங் வசதியும் உள்ளது.

ஆசஸ் சென்போன் 4 செல்ஃபி (ZenFone 4 Selfie ) ரூ.9,999 என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடலானது சன்லைன் கோல்டு, ரோஸ் பிங்க், டீப்சீ ப்ளாக் ஆகிய மூன்று நிறங்களில் (Sunlight Gold, Rose Pink, and Deepsea Black) வெளிவருகிறது.

ஃப்ளிப்கார்டு பிக்பில்லியன் டே சேல்ஸ் ஆஃபரில் ஆசஸ் செல்ஃபி 4 (ZD553KL) ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோல, சென்போன் 4 செல்ஃபி ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு நோ-காஸ்ட் இ.எம்.ஐ ஆப்ஷனும் உள்ளது.

Asus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment