Advertisment

Audeze Mobius ஹெட்செட் எப்படி இருக்கிறது ? முதற்பார்வை

இசைப் பிரியர்களுக்கென்று உருவாக்கப்பட்டது தான் இந்த ஔடிஜி மொபியஸ் ஹெட்செட்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Audeze Mobius headset

Audeze Mobius headset

Audeze Mobius : இசைப் பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் வெகு தூரம் பயணம் செய்பவர்கள், நீண்ட நேரம் சலிப்பூட்டும் வகையில் வேலை செய்பவர்களால் இசை இல்லாமல் ஒரு நொடிப் பொழுதினையும் கூட கடக்க இயலாது.

Advertisment

இசை நம் வாழ்வில் மிக முக்கியமான அங்கங்களில் ஒன்றாகிப் போனது. மார்கெட்களில் கிடைக்கும் ஹெட்செட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அனுபவத்தினை தரும். ஆனால் இந்த ஔடிஜி மொபியஸ் (Audeze Mobious) ஹெட்செட் இசைப் பிரியர்களுக்கென்றே உருவாக்கப்பட்டது.

ஒரு இசையைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது, அதன் பின்னால் நிகழும் சம்பவங்கள் நம் மனதில் அப்படியே ஒட்டிக் கொள்ளும். அப்படியான அனுபவத்தினை தருவதற்காகவே இந்த ஹெட்செட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பாடல்களை எப்போது கேட்டாலும் முதன்முறையாக கேட்பது போலவே இருக்கும்.

அப்படியான அனுபவத்தை ஔடிஜி மொபியஸ் மூலம் பாடல் கேட்கும் போது உணரலாம்.  360 டிகிரி சரௌண்ட் சவுண்ட் எக்ஸ்பிரியன்ஸைத் தரும் முதல் ஹெட்செட் என்ற பெருமையை தக்கவைத்துக் கொள்கிறது இந்த ஹெட்செட்.

Audeze Mobius - ல் ப்ளானர் மேக்னடிக் டெக்னாலஜி

ஹெட்செட்களில் ப்ளானர் மேக்னடிக் டெக்னாலஜி பயன்படுத்தும் முறை எப்போதாவது அதிசய நிகழ்வாய் நடப்பது உண்டு. அப்படியாகத் தான் இந்த தொழில்நுட்பம் இந்த ஹெட்செட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கன்வென்சனல் ட்ரைவர்ஸ் எதையும் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க காந்தங்கள் கொண்டு இந்த ஹெட்செட் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த காந்தகளுக்கு இடையே வையர் மூலம் மின்புலம் செலுத்தபடும் போது இசை உருவாகும். இப்படியான இசை உருவாக்கத்தில் இரைச்சல்கள் முற்றிலும் தவிர்க்கப்படும். ஆனால் ஹை பேஸ் வரை செல்ல இயலாது. இதன் அடிப்படையில் இந்த ஹெட்செட்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Audeze Mobius -ன் சிறப்பம்சங்கள்

மற்ற ஹெட்செட்கள் போல் இல்லாமல் கொஞ்சம் பெரிய ஹெட்செட்டாக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெளியில் தூக்கிச் செல்வது மிகவும் கடினமான ஒன்றாகவும் நீங்கள் உணரலாம். இதை ஃபோல்ட் செய்ய இயலாது.

இதன் இடது பக்கத்தில் பவர் பட்டன் இருக்கிறது. ப்ளூடூத் பேரிங்கிற்காக அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். யூ.எஸ்.சி - சி கேபிள் மற்றும் 3.5 எம்.எம். ஜாக் மூலமாக உங்களின் ம்யூசிக் சோர்ஸ் டிவைசில் இந்த ஹெட்செட்டை இணைத்துக் கொள்ளலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும்.

Audeze Mobius headset Audeze Mobius headset

ம்யூசிக் கேட்கும் போது கிடைக்கும் அனுபவமானது, திரைப்படம் பார்க்கும் போதும், வீடியோ கேம்கள் விளையாடும் போது டால்பி அட்மோஸ் அனுபவத்தை தரும் இந்த ஹெட்செட்.

மேலும் படிக்க : நான்கு கேமராக்களை கொண்டு உருவாக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment