தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் புத்தாடைகள், வீட்டு உபபோயகப் பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்து வருகிறார்கள். அந்தவகையில், இந்த பண்டிகை காலத்தில் உங்கள் ஸ்மார்ட்போனை அப்கிரேடு செய்வதற்கு சிறந்த நேரமாக உள்ளது. அதாவது சலுகை விலையில் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களைப் பெறலாம்.
ஆம், அமேசான் நிறுவனம் முன்னணி நிறுவனங்களின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் வழங்குகிறது. ஜியோமி, சாம்சங், ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 40,000 கீழ், ரூ. 50,000 கீழ் ரூ. 50,000 மற்றும் ரூ. 50,000 மேல் என வகைப்படுத்தி சிறந்த பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.
ரூ. 40,000 கீழ் ஸ்மார்ட்போன்கள்
Samsung Galaxy A73
சாம்சங் கேலக்ஸி ஏ73, கேலக்ஸி ஏ-சீரிஸின் சிறந்த ஆல்ரவுண்ட் போன்களில் ஒன்றாகும். இது ஸ்னாப்டிராகன் (Snapdragon 778G 5G) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான சாம்சங்கின் சிறந்த One UI 4 உடன் வருகிறது. விரைவில் Android 13-அடிப்படையிலான One UI 5 அப்டேட் வரவிருகிறது.
சிறப்பம்சங்கள்
108MP குவாட் கேமரா
6.7-இன்ச் 120Hz AMOLED டிஸ்ப்ளே
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ்
அண்டர் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் மற்றும் பல அம்சங்கள் வருகிறது. அனைத்து சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் உள்பட போன் ரூ.38,999-இல் இருந்து தொடங்குகிறது.
Xiaomi Mi 11X Pro
ஜியோமி Mi 11X Pro, இது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கடைசி 'Mi' பிராண்டட் போன்களில் ஒன்றாகும். Snapdragon 888 யில் இயங்குகிறது.
சிறப்பம்சங்கள்
6.67-இன்ச் AMOLED 120Hz டிஸ்பிளே
HDR10+ certification
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ்
108MP டிரிபிள் கேமரா
33W ஃபாஸ்ட் சார்ஜிங்
4,520mAh பேட்டரி உள்ளது. ஜியோமி Mi 11X Pro அடிப்படை விலை ரூ.35,999- இல் இருந்து தொடங்குகிறது.
OnePlus 10R
ஒன்பிளஸ் 10ஆர் Dimensity 8100யில் இயங்கும் பிராண்டின் 10-சீரிஸ் ஃபோன்களில் ஒன்றாகும். சிறந்த விலையில் OxygenOS 12 மென்பொருடன் வருகிறது.
சிறப்பம்சங்கள்
HDR 10+ ஆதரவுடன் 6.7-இன்ச் 120Hz AMOLED திரை, 12GB வரை ரேம் மற்றும் 256GB UFS 3.1 சேமிப்பிடம் வருகிறது. 50எம்பி மெயின் சென்சார் மற்றும் 8எம்பி அல்ட்ராவைடு சென்சார் கொண்ட டிரிபிள் கேமரா மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000 எம்.ஏ.எச் பேட்டரி. இந்த போன் ரூ.32,999- முதல் அமேசானில் கிடைக்கிறது.
ரூ.50,000 கீழ் சிறந்த ஸ்மார்ட்போன்கள்
Apple iphone 12
ஆப்பிள் ஐபோன் 12 புது அப்பேட் போன்கள் வந்தாலும் புதிதாக உள்ளது. பலரும் விரும்பி வாங்கி வருகின்றனர் . 5ஜி இணைப்புடன் போன் இயங்குகிறது.
ஐபோன் 12 அனைத்து தள்ளுபடிகளுடன் ரூ. 45,749 இல் வருகிறது. இதில், 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே பேனல், A14 பயோனிக் சிப்செட், டூயல் 12MP கேமராக்கள் மற்றும் 5G மற்றும் MagSafe ஆதரவை வழங்குகிறது.
OnePlus 10T
iQOO 9T இன் நெருங்கிய போட்டியாளரான OnePlus 10T ஆனது, iQOO இன் FunTouch OS க்கு பதிலாக OxygenOS 12 வழங்குகிறது. மாறுபட்டவடிவமைப்பு மற்றும் மென்பொருள் அனுபவத்துடன் அதேபோன்ற சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது.
6.7-இன்ச் AMOLED 120Hz டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 சிப்
16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ்
50MP+8MP+2MP மூன்று கேமரா
150W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,800mAh பேட்டரி உள்ளது. அனைத்து சலுகைகளையும் சேர்த்து இந்த போன் ரூ.44,999 முதல் கிடைகிறது.
ரூ.50,000 மேல் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள்
OnePlus 10 Pro
OnePlus 10 Pro சலுகைகளுடன் சேர்த்து ரூ.55,999 முதல் கிடைக்கிறது. சிறப்பம்சங்களாக, ஓன்பிளஸ் 10 பிரோ, HDR10+ மற்றும் QHD+ தெளிவுத்திறனுடன் கூடிய 6.7-இன்ச் LTPO 2.0 120Hz AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 சிப், 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ், 48MP + 50MP + 8K ஆதரவு ட்ரிப்பிள் கேமரா மற்றும் 8K வீடியோ பதிவு, 5000mAh பேட்டரி மற்றும் 80W வயர்டு + 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.
Samsung Galaxy S22 5G
Galaxy S22 5G போன் ஒட்டுமொத்த சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. இந்த போன் ஆன்லைனில் ரூ.52,999 முதல் கிடைக்கிறது. அமேசான் இந்தியாவின் தயாரிப்புப் பக்கத்தில் ரூ.51,990 க்கு இந்த போன் கிடைக்கிறது.
Galaxy S22 5G ஆனது HDR10+ உடன் 6.1 இன்ச் 120Hz AMOLED டிஸ்பிளே உடன் வருகிறது. 8GB RAM மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் வசதி உள்ளது. 50MP+10MP+12MP ட்ரிபிள் கேமரா, வயர்டு/வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 3,700mAh பேட்டரி மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் போன்ற இதர அம்சங்கள் உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.