ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் - இந்த 3 நிறுவனங்களின் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் என்னென்ன ?

Best Prepaid Plans Under Rs 400 : 84 நாட்களுக்கான இந்த திட்டத்திலும், நாள் ஒன்றிற்கு வாடிக்கையாளர் 1.5ஜிபி டேட்டாவை பயன்படுத்த இயலும்.

Best Prepaid Plans Under Rs 400 from Airtel, Reliance Jio and Vodafone : இந்தியாவில் சிறந்த மொபைல் நெட்வொர்க் சேவையை வழங்கி வருகிறது ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள்.

Best Prepaid Plans Under Rs 400 from Airtel, Reliance Jio and Vodafone

இந்நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் சேவைகளை வழங்கி வருகிறது. ரூ. 400க்கும் குறைவான கட்டணத்தில் அந்நிறுவனங்கள் வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் ப்ளான்கள் ஒரு பார்வை

ஏர்டெல் – 399 ரூபாய்க்கான திட்டம்

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டத்தின் மூலமாக ஒரு பயனாளி 84 நாட்களுக்கு 1ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

4ஜி/3ஜி/2ஜி சேவைகளிலும் இந்த திட்டத்தின் மூலம் டேட்டாவைப் பெறலாம்.

தேசிய மற்றும் உள்ளூர் அழைப்புகள் முற்றிலும் இலவசம். மேலும் ஒரு நாளைக்கு 100 இலவச குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும்.

ஏர்டெல் நிறுவனத்தின் அனைத்து வகையான ஆன்லைன் சேவைகளையும் இந்த திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க : 48எம்.பி. கேமராவுடன் அசத்தும் ஹானரின் புதிய போன்… 

ரிலையன்ஸ் ஜியோவின் திட்டம்

84 நாட்களுக்கான இந்த திட்டத்திலும், நாள் ஒன்றிற்கு வாடிக்கையாளர் 1.5ஜிபி டேட்டாவை பயன்படுத்த இயலும்.

நாள் ஒன்றிற்கு 100 இலவச குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொள்ள இயலும்.

4ஜி டேட்டாவுடன், அனைத்துவிதமான அழைப்புகளும் இலவசம்.

இந்த திட்டத்தை பயன்படுத்தி, ஜியோ டிவி, ஜியோ மனி போன்ற சேவைகளையும் பெற்றுக் கொள்ள இயலும்.

வோடஃபோன்

84 நாட்கள் வேலிட்டி கொண்ட இந்த திட்டம், நாளொன்றிற்கு வாடிக்கையாளருக்கு 1ஜிபி டேட்டாவை தருகிறது. 4ஜி/3ஜி/2ஜி என அனைத்து சேவைகளிலும் டேட்டாவை பெற்றுக் கொள்ள இயலும்.

நாள் ஒன்றிற்கு 100 இலவச குறுஞ்செய்திகள் அனுப்ப இயலும். ரோமிங் கால்கள், உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் நாளொன்றிற்கு 250 நிமிடங்கள் அல்லது வாரத்திற்கு 1000 நிமிடங்கள் வரை பேசிக் கொள்ளலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

×Close
×Close