Advertisment

கொளுத்துற வெயிலுலயும் ஜாலியா பைக் ரைட் போகணுமா ? நீங்க வாங்க வேண்டிய ஹெல்மெட் இது தான்!

ஃபோம் பேஸ்ட் ( foam based ) ஃபில்டர்கள் இதில் பயன்படுத்தப்படுவதால் வெகு நேரத்திற்கு தண்ணீர் மற்றும் ஈரத்தினை தக்கவைத்துக் கொள்ள இயலும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BluSnap Helmet Coolers

BluSnap Helmet Coolers

BluSnap Helmet Coolers : கோடை காலம் துவங்கிவிட்டது. காலையில் 6 மணிக்கெல்லாம் பகலவன் தோன்ற பகலாகவே பொழுது விடிகின்றது. 9 அல்லது 9.30 மணிக்கெல்லாம் அலுவலகம் சென்று விட வேண்டும். இல்லையென்றால் நிலைமை மிக மோசமாகிவிடும். காரணம் முகத்திற்கு நேராக அடிக்கும் ஏறு வெயிலில் வண்டியிலோ, நடந்தோ செல்வது என்பது வேதனையிலும் வேதனை.

Advertisment

நம் கஷ்டத்தை நன்கு உணர்ந்த சிலர் தங்களின் சொந்த முயற்சியால் ஏர் கூலர் ஹெல்மெட் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் இனி ஜாலியாக வண்டியில் இந்த கோடை காலத்தில் சுற்றித் திரிய இயலும்.

BluSnap Helmet Coolers

செல்போன்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் இயன் பேட்டரிகளில் இயங்கும் இந்த ஹெல்மெட்டினை நீங்கள் யூ.எஸ்.பி. கேபிள் கொண்டு சார்ஜ் செய்து கொள்ள இயலும். இந்த ஹெல்மெட்டிற்குள் மிகச்சிறிய வாட்டர் டேங் எனப்படும் வாட்டர் சோக்ட் ஃபில்ட்டர் ஒன்று வடிவமைக்கபட்டுள்ளது.வீட்டில் இயங்கும் ஏர் கூலரில் பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹெல்மெட் கூலர் என்று அழைக்கப்படும் இந்த ஹெல்மெட் கூலரை வெறும் பத்தே நொடிகளில் உங்கள் கூலருடன் இணைத்து விடலாம். இந்த ஹெல்மெட் போடுவதால் நீங்கள் ஜில் என்று உணர்வதைப் போல், மாசு, தூசு புகை உங்களின் ஹெல்மெட்டில் அண்டாமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஃபோம் பேஸ்ட் ( foam based ) ஃபில்டர்கள் இதில் பயன்படுத்தப்படுவதால் வெகு நேரத்திற்கு தண்ணீர் மற்றும் ஈரத்தினை தக்கவைத்துக் கொள்ள இயலும். இதன் விலை வெறும் ரூ.2,299 மட்டுமே.

மேலும் படிக்க : சம்மர் காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு என்ன உணவாக கொடுக்கலாம் ?

ப்ளுஸ்நாப் ஹெல்மெட் கூலர் என்ற பெயரில் விற்கப்படும் இந்த ஹெல்மெட்டுகளை வாங்க நீங்கள் வேகா ஹெல்மெட் ஷோ ரூம் சென்றால் போதுமானது.

Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment