Advertisment

ரூ. 8999-ல் இருந்து ஆரம்பமாகும் எல்.ஜி.யின். லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள்!

LG W30 Pro ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை எல்.ஜி. நிறுவனம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Budget Smartphones LG W10, W30, W30 Pro Sales, Availability, Price

Budget Smartphones LG W10, W30, W30 Pro Sales, Availability, Price

Budget Smartphones LG W10, W30, W30 Pro Sales, Availability, Price : இந்தியாவில் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது எல்.ஜி. நிறுவனம். W10, W30 மற்றும் W30 Pro என்ற இந்த மூன்று போன்கள் அமேசான் இணையத்தில் விற்பனைக்கு வைக்கப்படும்.  இந்த மூன்று போன்களும் இந்தியாவின் பட்ஜெட் வாடிக்கையாளர்களை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டது என்று எல்.ஜி. தரப்பு கூறுகிறது.

Advertisment

Budget Smartphones LG W10, W30, W30 Pro Sales, Availability, Price

LG-யின் W10 ஸ்மார்ட்போன் விலை ரூ.8,999 ஆகும். W30 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9,999 ஆகும்.  இந்த இரண்டு போன்களும் ஜூலை மூன்றாம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. ஆனால் W30 Pro ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை எல்.ஜி. நிறுவனம்.

மேலும் படிக்க : விவோவின் புதிய பட்ஜெட் போன் Y12

LG W10 Smartphone Specifications

ரூபாய் 8,999க்கு விற்பனையாகும் இந்த ஸ்மார்ட்போன் 6.19 இன்ச் எச்.டி. திரை மற்றும் ஃபுல் விசன் டிஸ்பிளேயுடன் வெளியாகிறது.

இதன் அஸ்பெட்க் ரேசியோ 18.9:9 ஆகும்

மீடியாடெக் ஹெலியோவின் பி22 ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது

3ஜிபி ரேம் + 32ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

இரட்டை பின்பக்க கேமராக்களைக் கொண்டுள்ளது (13MP+5MP)

செல்ஃபி கேமராவின் செயல்திறன் 8 எம்.பி. ஆகும்

4000mAh பேட்டரி சேமிப்புத் திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை இயங்கு தளத்தில் செயல்படும்.

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் போனின் பின்புறம் பொறுத்தப்பட்டுள்ளது.

இரண்டு சிம்கார்ட்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்

துலிப் பர்ப்பிள் மற்றும் ஸ்மோக்கி கிரே நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகிறது.

மேலும் படிக்க : ஆண்ட்ராய்ட் க்யூ அப்டேட்டினை பெறும் போன்கள் எவையெவை ?

LG W30 Smartphone Specifications

6.26 இன்ச் எச்.டி திரை மற்றும் ஃபுல்விஷன் டிஸ்பிளே கொண்டுள்ளது.  இதன் அஸ்பெக்ட் ரேசியோ 19.9 ஆகும்.  மீடியாடெக் நிறுவனத்தின் ஹேலியோ பி22 ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுளது.  ஆண்ட்ராய்ட் 9 பை இயங்குதளத்தில் இயங்கும் இந்த போனின் ஸ்டோரேஜ் 3GB RAM/32GB ROM ஆகும்.  12MP+13MP+2MP செயல்திறனைக் கொண்ட மூன்று பின்பக்க கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. செல்ஃபி கேமராவின் செயல்திறன் 16 MP ஆகும்.  தண்டர் ப்ளூ, ப்ளாட்டினம் க்ரே, அரோரா கிரீன் போன்ற மூன்று நிறங்களில் இந்த போன் கிடைக்கப்பெறுகிறது.  4,000mAh சேமிப்புத்திறன் கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது.

மேலும் படிக்க : ஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள்? உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…

Lg Lg Smartphone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment