ஹானர் ப்ளே 8, ரெட்மி 7ஏ, ரியல்மீ 3i போன்களில் எது உங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறாக இருக்கிறது?

Budget Smartphones Under Rs.8000 அதிக சிறப்பம்சங்கள் வேண்டாம் குறைந்த விலையில் ஒரு போன் போதும் என்று கூறுபவர்களும் உண்டு. அவர்களுக்காகவே இந்த பட்டியல்

நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்லும் தொழில்நுட்பப் புரட்சியில் தினம் தினம் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்த வண்ணமே உள்ளன. கொஞ்சம் கொஞ்சமாய் பணம் சேமித்து ஸ்மார்ட்போன் வாங்கும் நபர்களும் உண்டு. அதிக சிறப்பம்சங்கள் வேண்டாம் குறைந்த விலையில் ஒரு போன் போதும் என்று கூறுபவர்களும் உண்டு.  8 ஆயிரம் ரூபாய்க்குள் ஸ்மார்ட்போன் இருந்தால் போது என்று நினைக்கும் வாடிக்கையாளர்களுக்காக இந்த பட்டியல்!

Honor Play 8 specifications (Price Rs. 6000/-)

5.17 இன்ச் அளவு உள்ள இந்த ஸ்மார்ட்போன் எச்.டி. + ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்பிளேவுடன் வெளியாகியுள்ள. ரெசலியூசன் 1520×720 ஆகும். க்வாட்கோர் மீடியா-டெக் ஹெலியோ ஏ22 ப்ரோசசர் மூலம் செயல்படுகிறது இந்த ஸ்மார்ட்போன் .

2ஜிபி ரேம் / 32ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜூடன் இந்த போன் வெளியாகிறது. இந்த ஸ்டோரேஜை 512 ஜிபி வரை மெமரி கார்ட் மூலமாக விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்கு தளத்தில் இயங்கும் இந்த போனின் பேட்டரி செயல் திறன் 3,020mAh ஆகும். கேமரா 13 எம்.பி. பிரைமரி சென்சாரை கொண்டுள்ளது. செல்ஃபி கேமரா 5 எம்.பி. ஆகும். மேலும் படிக்க : இந்த ஸ்மார்ட்போன் குறித்த முழுமையான தகவல்களைப் படிக்க

Xiaomi Redmi 7A Specification (விலை ரூ. 5,799 ஜூலை இறுதி வரை)

5.45 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் அஸ்பெக்ட் ரேசியோ 18:9. குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 439 ப்ரோசசர் பொருத்தப்பட்டுள்ளது. சியோமி ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் Sony IMX486 சென்சார் கொண்ட 12 எம்.பி. பின்பக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 5 எம்.பி. செல்ஃபி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.  அறிமுக சலுகை : அறிமுக சலுகையாகவே இந்த போன் ரூ.  5,799க்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 31க்கு பிறகு இதன் விலை ரூ. 6,199 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் குறித்து முழுமையான தகவல்களைப் பெற

Realme 3i Specifications (விலை : ரூ. 7,999)

6.2 இன்ச் எச்.டி திரை கொண்டது இந்த ஸ்மார்ட்போன். இதன் ரெசலியூசன் 1520×720 பிக்சல்களாகும். அஸ்பெக்ட் ரேசியோ 19:9.  கார்னிங் கொரில்லா க்ளாஸ் 3 பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ளது. 13 எம்.பி. முதன்மை கேமரா மற்றும் 2 எம்.பி. டெப்த் சென்சார் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபி கேமரா 13 எம்.பி. ஆகும். 12 என்.எம். மீடியாடெக் ஹெலியோ பி60 ப்ரோசசர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 4,230mAh பேட்டரி செயல்திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் கலர் ஓ.எஸ். 6.0 இயங்கு தளத்தில் இயங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போன் குறித்த முழுமையான தகவல்களைப் பெற

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Budget smartphones realme 3i xiaomi redmi 7a honor play 8 you can buy these smartphones under rs

Next Story
Lunar Eclipse 2019 : இன்றைய சந்திர கிரகணத்தை உங்கள் குழந்தைகளுடன் பார்த்து ரசிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?Lunar Eclipse 2020 Date, Time:
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com