Advertisment

சூப்பரான செல்ஃபி கேமரா போன்கள் பட்டியல்: உங்க பட்ஜெட் இதுதானா?

மேம்பட்ட செல்ஃபி கேமராவுடன் 20,000 ரூபாய்க்கும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கான பட்டியல் இங்கே.

author-image
WebDesk
New Update
Best smartphones under 20000 for video calling

Budget Smartphones Tamil News: ஸ்மார்ட்போன்களில் இருக்கும் முன் கேமராக்கள் அவ்வப்போது வீடியோ அழைப்பிற்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன் சரிபார்க்கும் விவரகுறிப்பின் முக்கிய பகுதியாகவே கருதப்படுகிறது. விஜிஏ (VGA) கேமராக்கள் முதல் செல்ஃபி கேமராக்கள் வரை அனைத்தும் வைடு ஆங்கிள் மற்றும் உயர் ரெஸல்யூஷன் வீடியோக்களை பதிவு செய்யும் திறன்களைக் கொண்டிருக்கிறது. மேலும் சில நிறுவனங்கள் டிஸ்பிளேயில் இரட்டை கேமராக்களையும் இணைத்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில், பிரீமியம் சாதனங்களில் மட்டுமல்லாமல், பட்ஜெட்டுக்கு ஏற்ற இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களிலும் செல்ஃபி கேமராக்கள் சிறப்பாக வந்துள்ளன.

வித்தியாச கன்டென்ட்டுகளை உருவாக்க, இன்ஸ்டாகிராமிற்கு சிறந்த புகைப்படங்கள் எடுக்க, வேலை சம்பந்த அழைப்புகளைச் செய்ய என இவ்வனைத்திற்கும் ஏற்ற வகையில் மேம்பட்ட செல்ஃபி கேமராவுடன் 20,000 ரூபாய்க்கும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கான பட்டியல் இங்கே.

Advertisment
ரியல்மீ 7 ப்ரோ

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இடைப்பட்ட ஸ்மார்ட்போன் இந்த ரியல்மீ 7 ப்ரோ. இதில் 32MP முன் கேமரா உள்ளது. உயர் தெளிவுத்திறன் (high-resolution) கொண்ட படங்களைக் கிளிக் செய்து, விருப்பப்பட்டால் நீங்கள் எடுத்த புகைப்படத்தின் பின்னணியை blur செய்து அழகிய போர்ட்ரெயிட்டுகளை உருவாக்கலாம். 6.4 இன்ச் முழு HD + சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவுடன் ரியல்மீ 7 ப்ரோ வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 720G ப்ராசசர் மூலம் இந்த மொபைல் இயக்கப்படுகிறது. மேலும், ரியல்மீ UI-உடன் அண்ட்ராய்டு 10 கொண்டிருக்கிறது. இது, 65W சூப்பர் டார்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500 mAh பேட்டரியால் ஆதரிக்கப்படுகிறது. பின்புறத்தில், குவாட்-கேமரா அமைப்புடன் 64MP முதன்மை கேமரா கொண்டிருக்கிறது. இந்த ரியல்மீ 7 ப்ரோவின் அடிப்படை விலை ரூ 19,999.

Best smartphones under 20000 for video calling Realme 7 Pro (Express Photo: Sneha Saha)

போக்கோ X2

முன்பக்கத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் பட்டியலில் உள்ள ஒரே ஸ்மார்ட்போன் போகோ X2. இது 20MP முதன்மை கேமராவையும், 2MP டெப்த் சென்சாரையும் கொண்டிருக்கிறது. இதில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.67 இன்ச் FHD + டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730G ப்ராசசர், 4,500 mAh பேட்டரி, 27W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. ஆண்ட்ராய்டு 10-ஐ அடிப்படையாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் சொந்த MIUI 11-ஆல் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. இதில் உள்ள குவாட் ரியர் கேமரா அமைப்பு, 64MP முதன்மை லென்ஸ், 8MP அல்ட்ராவைடு லென்ஸ், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவற்றின் இணைப்பினால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது, 15,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது அடிப்படை மாறுபாட்டினால் இதன் ஆரம்ப விலை ரூ.17,499-ஆக உயர்ந்திருக்கிறது.

Best smartphones under 20000 for video calling Poco X2 (File Photo)

ஒப்போ F17

ஒப்போ F17-ல், வாட்டர் டிராப் ஸ்டைல் ​​நாட்ச் (waterdrop style notch) உள்ளே அமைக்கப்பட்ட 16MP முன் கேமரா உள்ளது. 2400 × 1080 ரெஸல்யூஷனில் 6.44 இன்ச் அல்ட்ரா HD டிஸ்ப்ளே இதில் இருக்கிறது. மேலும் இது, 6GB / 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் இடத்துடன் இணைத்து குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. நிறுவனத்தின் சொந்த FunTouch OS 7.2-உடன் ஆண்ட்ராய்டு10 OS இணைந்து இந்த சாதனம் இயங்குகிறது. இவை அனைத்தும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,000mAh பேட்டரியால் ஆதரிக்கப்படுகின்றன. பின்புறத்தில், 8MP வைடு ஆங்கிள் சென்சார் (wide angle sensor) மற்றும் இரண்டு 2MP மோனோக்ரோம் (monochrome) சென்சார்களுடன் 16MP முதன்மை சென்சார் கொண்ட குவாட்-கேமரா அமைப்பு இருக்கிறது. ஒப்போ F17-ன் ஆரம்ப விலை ரூ 17,990.

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்

ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸில் 32MP முன் கேமரா உள்ளது. இதில் 6.67 இன்ச் FHD + டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 720G ப்ராசசர், 64MP quad-rear கேமரா அமைப்பு, 33W வேகமான சார்ஜிங் கொண்ட 5020mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இது MIUI-உடன் அண்ட்ராய்டு 10 ஆதரவுடன் இயங்குகிறது. ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸின் 6GB RAM மற்றும் 64 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடலின் விலை ரூ.16,999. 64 GB கூடுதல் சேமிப்பிற்கு ரூ.18,499 வரையிலும் கிடைக்கும்.

Best smartphones under 20000 for video calling Best smartphones under 20000 for video calling

சாம்சங் கேலக்ஸி M31s

சிங்கிள் டேக் வசதியுடன் 32MP முன் கேமராவைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி M31s. இது எக்ஸினோஸ் 9611 (Exynos 9611) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், 6GB + 128GB பதிப்பு 19,499 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இதில் 6.5 AMOLED FHD + ஸ்க்ரீன் மற்றும் 6,000 mAh பேட்டரி உள்ளது. மேலும், இது ஆண்ட்ராய்டு 10-ல் இயங்குகிறது. பின்புறத்தில், 64MP முதன்மை கேமரா, 12MP அல்ட்ரா-வைட் லென்ஸ், 5MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 5MP டெப்த் கேமரா உள்ளிட்டவை கொண்ட குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது.

Best smartphones under 20000 for video calling (Express Photo: Anuj Bhatia)

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Smartphone Samsung
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment