Advertisment

Canon 90D : எப்படி இருக்கிறது இந்த எண்ட்ரி லெவல் கேமரா?

32.5 மெகாபிக்சல்கள் கொண்ட சிமாஸ் சென்சாரை கொண்டுள்ளது. டிஜிட்டல் இண்டெகிரேட்டட் சர்க்யூட் 8 (Digic 8) இதில் பொருத்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Canon EOS 90D entry level camera specifications

Canon EOS 90D entry level camera specifications

Canon EOS 90D entry level camera specifications, price, availability, review : என்னதான் சூப்பரான கேமரா சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன்கள் வெளியானாலும், கேமரா என்றால் அது தனி அழகு தான். ஒவ்வொருவருக்கும் ”கேமரா மற்றும் புகைப்படங்கள்” என்ற பேரில் தனி கதையே இருக்குன், தற்போது கெனன் நிறுவனம் 90D கேமராவை வெளியிட்டுள்ளது. எண்ட்ரி லெவல் கேமராவான இதில் இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்து ஒரு பார்வை.

Advertisment

இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?

publive-image

இந்த கேமரா சற்று கம்பேக்ட்டாக இருக்கிறது. அதே போன்று கொஞ்சம் இலகுவாகவும் இருப்பதால் எளிதில் எங்கும் எடுத்துச் செல்லலாம். அதே போன்று இதில் இருக்கும் எல்.ஈ.டி. டிஸ்பிளே புகைப்படங்களை மிகவும் தெளிவாக காட்டுகிறது. தொடுதிரையில் உங்களின் விருப்பம் போல ஷட்டர் ஸ்பீட், அபெர்ச்சர், ஐ.எஸ்.ஓ ஆகியவற்றை கண்ட்ரோல் செய்து கொள்ள இயலும். அதே நேரத்தில் பட்டன்கள் மற்றும் டயல்கள் மூலமாகவும் நீங்கள் இதனை கண்ட்ரோல் செய்து கொள்ள இயலும். எது உங்களுக்கு வசதியானதாக இருக்கின்றதோ அதனை நீங்கள் பின் தொடரலாம்.

Canon EOS 90D entry level camera specifications

32.5 மெகாபிக்சல்கள் கொண்ட சிமாஸ் சென்சாரை கொண்டுள்ளது. டிஜிட்டல் இண்டெகிரேட்டட் சர்க்யூட் 8 (Digic 8) இதில் பொருத்தப்பட்டுள்ளது.

3 இஞ்ச் எல்.சி.டி தொடுதிரை மூலமாக நீங்கள் உங்களின் புகைப்படங்களில் இருக்கும் துல்லிய தன்மையை அறிந்து கொள்ளலாம்.

30 – 1/16000 sec ஷட்டர் ஸ்பீடினை கொண்டுள்ளது. இதன் ஐ.எஸ்.ஓ 100-ல் துவங்கி 25,600 வரை உள்ளது.

யூ.எஸ்.பி. டைப் சி மற்றும் எச்.டி.எம்.ஐ கனெக்சனுகளுக்கான போர்ட்டுகள் இதில் உள்ளது.

இதன் மொத்த எடை 701 கிராம்கள் (Camera Body Only) ஆகும்.

publive-image

விலை : ரூ. 97,495 (Camera Body only)

மைக்ரோபோன்கள், ஹெட்போன்கள் ஆகியவற்றிற்கு தனியாக போர்ட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கேமராவின் வீடியோ இண்டெர்ஃபேஸ் மூலம் விரைவில் ஆடியோ செட்டிங்கை பெற்றிடலாம். க்ராப் மற்றும் அன்க்ராஸ்ட் மோட் மூலமாகவும் 4K வீடியோக்களை ஒருவர் ஷூட் செய்ய இயலும். இது போன்ற சிறப்பம்சங்களை தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இதில் இருக்கும் சிறப்பம்சங்கள் அனைத்தும் வெட்டிங் போட்டோகிராஃபியில் துவங்கி, லேண்ட்ஸ்கேப் போட்டோகிராஃப்கள் வரை அனைத்தையும் எடுக்க வழி வகை செய்கிறது. முதன்முறையாக புகைப்பட கலையை கற்றுக் கொள்ள விரும்பும் நபர்களுக்கான கேமராவாக இது இல்லை. மாறாக இந்த கேமரா ப்ரோஃபெஷ்னலாக புகைப்படங்கள் எடுக்க விரும்பும் நபர்களுக்கான எண்ட்ரி லெவல் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : என்ன தான் தடை செய்தாலும் டிக்-டாக் தான் முதலிடம்… இந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட செயலிகள்!

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment