Advertisment

சந்திரயான் 2 : புதிய சரித்திரம் படைக்க இருக்கும் 48 நாள் பயணம்!

Chandrayaan 2 Mission to the moon : விக்ரமும் பிரக்யானும் நிலவில்  14 நாட்கள் மட்டுமே செயல்படும். ஆர்பிட்டர் ஒருவருடம் வரை இயங்கும். 

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chandrayaan-2 Vikram Lander separates from Orbiter

Chandrayaan-2 Vikram Lander separates from Orbiter

Chandrayaan 2 Mission to Moon Live Updates :  இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின் மிக முக்கியமான மைல் கல்லை எட்டியது சந்திரயான்-2.  நேற்று விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 வருகின்ற ஒன்றரை மாதங்களில் 15க்கும் மேற்பட்ட மிகவும் சவாலான தடைகளை தாண்ட உள்ளது . நிலவில் கால் பதிக்க இருக்கும் நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையையும், தென் துருவத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருக்கும் முதல் நாடு என்ற பெருமையையும் உறுதி செய்ய இருக்கும் இந்த 48 நாட்கள் பயணம் பற்றி ஒரு பார்வை!

Advertisment

Chandrayaan 2 Mission to Moon Live Updates

ஜூலை 22 முதல் ஆகஸ்டு 13 : இந்த 22 நாட்கள் வரையிலான காலகட்டத்தில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கும் சந்திரயான் ஐந்து முக்கியமான கட்டங்களை தாண்ட உள்ளது. நேற்று 170 கி.மீ தொலைவில் சந்திரயான் பூமியை சுற்றி வந்தது. இந்த கட்டத்தின் இறுதி நாளான ஆகஸ்ட் 13ம் தேதி 39, 120 கி.மீ தொலைவிற்கு அப்பால் சென்றுவிடும் சந்திரயான் 2. இந்த காலத்தில் 5 முக்கியமான சவால்களை சந்திரயான் கடக்கும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 13 : அன்று புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் செல்ல ஏழு நாட்கள் பயணத்தை மேற்கொள்ளும்.

ஆகஸ்ட் 20 : புவியின் சுற்றுவட்டபாதைக்குள் பயணிக்க துவங்கிவிடும். 100 கி.மீ. தொலைவில் நிலவை சுற்றி வரும்.

செப்டம்பர் 2  : அன்று ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் மற்றும் பிரக்யான் தானியாக பிரிந்து நிலவில் தரையிறங்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளும்.

செப்டம்பர் 7 : எங்கே தரையிறங்கலாம் என்று சரியான இடத்தினை தேர்வு செய்து நிலவில் விக்ரமும் பிரக்யானும் தரையிறங்க ஆயத்தமாகும். இதற்கு 10 முதல் 20 நிமிடங்கள் தேவைப்படும். எந்த ஒரு பிரச்சனையும் வராமல் மெதுவாக தரையிறங்க, கேமராக்கள் உதவிகள் மூலம் கமெண்ட்கள் வழங்கப்படும்.

அதே நாளில் நிலவில் தரையிறங்கியவுடன், விக்ரம் (லேண்டர்) - ல் இருந்து ப்ரக்யான் (ரோவர்) வெளியேறி தன்னுடைய ஆராய்ச்சி பணிகளை துவங்கும். ஒரு நொடிக்கு ஒரு செ.மீ. என்ற வேகத்தில் தான் ஆரம்பக்கட்டத்தில் இது நகரும். விக்ரமும் பிரக்யானும் நிலவில்  14 நாட்கள் மட்டுமே செயல்படும். ஆர்பிட்டர் ஒருவருடம் வரை இயங்கும்.

மேலும் படிக்க : விண்ணில் ஏவப்பட்டது இஸ்ரோவின் பாகுபலி… உலக அரங்கில் முக்கியத்துவம் பெறும் சந்திரயான் 2!

1st Manoeuvre - முதல்முறையாக சுற்றுவட்டப்பாதை தூரத்தை அதிகப்படுத்திய சந்திரயான் 2

24/07/2019 - அன்று மதியம் 02:52 தன்னுடைய சுற்றுவட்டப்பாதையை குறைந்தது 233 கி.மீ அதிகபட்சம் 45,163 கி.மீ என்ற கணக்கில் மாற்றிக் கொண்டது. 3 மணிக்கு சரியாக 48 நொடிகள் இருக்கின்ற நிலையில் அது தன்னுடைய முந்தைய சுற்று வட்டப்பாதையில் விலகி இந்த பாதையை நோக்கி பயணிக்க துவங்கியது.

2nd Manoeuvere - இரண்டாவது முறையாக சுற்றுவட்டப்பாதை தூரத்தை அதிகப்படுத்திய சந்திரயான் 2

26/07/2019 அன்று  2வது முறையாக தன்னுடைய சுற்றுவட்டப்பாதையை அதிகரித்துக் கொண்டது சந்திரயான் 2. சந்திரயான் 2 தற்போது 54,829 கி.மீ தூரம் பயணித்து வருகிறது. அடுத்த சுற்றுவட்டப்பாதை அதிகரிப்பு  29ம் தேதி நடைபெற உள்ளது.

புவியை புகைப்படம் எடுத்த சந்திரயான் 2

நிலவை மட்டுமல்லாது புவியையும் ஆய்வு செய்கிறது போல இந்த சந்திரயான் 2. நிலவை நோக்கி 13வது நாள் (03/08/2019) நேற்று நகர்ந்து கொண்டிருக்கும் போது, மாலை 05:30 சமயத்தில் புவியை வானில் இருந்தபடியே தன்னோடு பொருத்தப்பட்டிருக்கும் எல்14 கேமராவைக் கொண்டு அழகாய் படம் எடுத்து அனுப்பியுள்ளது சந்திரயான். அந்த புகைப்படங்கள் அனைத்தையும் இஸ்ரோ தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளது.

இது தொடர்பான முழுமையான செய்தியையும், அந்த புகைப்படங்களையும் காண  

பூமிக்கு விடை கொடுத்த சந்திரயான் 2

பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இது வரை இயங்கிக் கொண்டிருந்த சந்திரயான் 2 விண்கலம் ஆகஸ்ட் 14ம் தேதி புவியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகியது. இந்நிகழ்வு சரியாக 14ம் தேதி காலை 02.21 மணிக்கு நடைபெற்றது. கிட்டத்தட்ட 7 நாட்கள் விண்ணில் பயணித்த பிறகே சரியாக நிலவின் சுற்றுவட்டப்பாதையை சந்திரயான் 2 நெருங்க முடியும்.

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் 2

Lunar Orbit insertion : நிலவின் சுற்றுவட்டப் பாதையை நோக்கி நகர்ந்த சந்திரயான் 2 இன்று காலை 9 மணிக்கு நிலவின் சுற்றுவட்டப் பாதையில் தடம் பதித்தது. இதற்காக 30 நிமிடங்கள் வரை நேரம் எடுத்துக் கொண்டது சந்திரயான் 2. வருகின்ற 2ம் தேதி விண்கலத்தில் இருந்து லேண்டரும், ரோவரும் பிரிந்து செல்லும். வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறங்குறது லேண்டர் விக்ரமும், ரோவர் பிரக்யானும். 6 சக்கரங்களை கொண்ட பிரக்யான் நிலவின் தரையில் நகர்ந்து 14 நாட்களுக்கு தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்.

Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment