Advertisment

ஜூலை 15ம் தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2 செயற்கை கோள்

8 யானைகளின் எடைக்கு சமமான 13 செயற்கைகோள்கள் சந்திராயனுடன் விண்ணில் ஏவப்படுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chandrayaan 2 will be launched on July 15 says ISRO Chief K Sivan, Chandrayaan 2 Launch Live telecast details, Chandrayaan 2, Chandrayaan 2 Launch Date, Chandrayaan 2 Launch Time, Chandrayaan 2 Launch Live telecast details

Chandrayaan 2 Public Viewing Timing

இந்தியாவின் பெருமைக்குரிய விண்வெளித்துறை சாதனைகளில் ஒன்று தான் சந்திராயன் செயற்கைக் கோள். நிலவின் சூழலை துல்லியமாக ஆராய்ந்து தக்க தகவல்களை அளித்து வரும் சந்திராயன் 1 செயற்கை கோளின் பார்ட் - 2வாக விண்ணில் பாய இருக்கிறது சந்திராயன் 2.  வருகின்ற ஜூலை 15ம் தேதி, அதிகாலை 2 மணி 51 நிமிடங்களுக்கு விண்ணில் பாய இருப்பதாக இஸ்ரோவின் தலைவர் டாக்டர். கே. சிவன் அறிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பான முழுமையான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

13 முக்கியமான செயற்கைகோள்கள் சந்திராயன் 2-னுடன் விண்ணில் ஏவப்படுகிறது. 3.8 டன்கள் எடை கொண்ட இந்த செயற்கைகோள்களின் மொத்த எடையாது 8 யானைகளுக்கு சமமானது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் சிவன் அறிவித்துள்ளார்.

நிலவின் தெற்கு பகுதியினை ஆய்வு செய்வதற்காக இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படுகிறது. நிலவின் தெற்கு பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் முதல் செயற்கைகோள் இது என்றும் அவர் கூறினார்.

ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என்று மூன்று கூறுகளாக கட்டமைக்கப்பட்டுள்ளது இஸ்ரோ. ஆர்பிட்டர் மற்றும் லேண்டர் இரண்டும் ஒருங்கிணைந்து கட்டமைக்கப்பட்டு அது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டினுள் வைக்கப்பட்டுள்ளது.

ரோவர் லேண்டருக்குள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டவுடன் இந்த மொத்த கட்டமைப்பும் ஆர்பிட்டர் ப்ரோபல்சன் மோடுயூலின் உதவியுடன் சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கத் துவங்கும்.

பின்னர் நிலவின் தென் துருவத்தில், லேண்டர் மட்டும் தனியாக தரையிறங்கிவிட, ரோவர் தன்னுடைய ஆராய்ச்சிகளை துவங்கும். ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த செயற்கைகோள் உருவாக்கப்பட்டுள்ளது.

Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment