சீனாவால் உருவாக்கப்பட்டு இந்தியர் பிரயோகிக்கும் 41 செல்போன் செயலிகளில் உளவு பார்க்கும் வைரஸ்கள் உள்ளதாக அதிர்ச்சி தகவலை இந்திய புலனாய்வு அமைப்புகளும், ராணுவமும் வெளியிட்டுள்ளது.
உலகெங்கும் தொழிற்நுட்பம் மேலோங்கி வரும் நிலையில், பெரும்பாலானோர் ‘ஸ்மார்ட் ஃபோன்கள்’ உபயோகப்படுத்துகின்றனர். இதில் பொழுது போக்கிற்கு பொதுமக்கள் சில செயலிகளை (mobile app) பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு உபயோகிக்கும் ஆப்களில் சீனாவால் உருவாக்கப்பட்ட ‘41 ஆப்களில்’ உளவு பார்க்கும் வைரஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தச் செயலிகள் ‘ஆண்டுராய்டு’ மட்டுமின்றி ‘ஆப்பிள்’ ஃபோன்களிலும் பதிவிறக்கம் செய்யப்பட்டு உபயோகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வைரஸ்கள் மூலம் இந்தச் செயலியை உபயோகிப்பவரின் தகவல்களை திரட்டி வருகின்றனர். இதன் மூலம் சேகரித்த தகவல்களைக் கொண்டு இந்தியா மீது சீனா மென்பொருள் வழி தாக்குதலை (cyber attack) தொடுக்கும் அபாயம் உள்ளது எனப் புலனாய்வு அமைப்பும் ராணுவமும் கூறியுள்ளது. எனவே பொதுமக்கள் செயலிகளைப் பதிவேற்றம் செய்யும் முன் அதைப் பற்றி விவரம் அறிய வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/03/China-apps-women-use-IE-300x217.jpg)
குறிப்பாகப் பெண்கள் அதிகம் உபயோகப்படுத்தும் ‘யூ காம் பெர்ஃபெக்ட்’ (Youcam Perfect), ‘பியூட்டி பிளஸ்’ (Beauty Plus), ‘வண்டர் கேமரா’ (Wonder Camera) மற்றும் ‘செல்பி சிட்டி’(Selfie City) போன்ற ஆப்கள் அடக்கம். வெய்போ, வீ சாட், ஷேர்இட், யு.சி.நியூஸ், யு.சி.பிரவுசர், பியூட்டி பிளஸ், நியூஸ் டாக், டி.யு.ரிகார்டர், சி.எம்.பிரவுசர் உள்ளிட்ட, 41 மொபைல் ஆப்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2018/03/China-apps-IE-300x217.jpg)