வினை தந்திரம் கற்போம் : காலநிலை மாதிரி!

காலநிலை மாதிரி ( Climate model ) என்பது, புறக்காரணிகளுக்கு, பூமி எவ்வாறு எதிர்வினை ஆற்றும் என உருவகம் (simulation) செய்து பார்க்கும் தொழில்நுட்பம்.

கடந்த சில தினங்களில் கடவுளின் தேசத்திலிருந்து வரும் க(த)ண்ணீர்க் கதைகள் சகிக்க முடியாதவையாக இருக்கின்றன.

கடும் மழை, வீதியெங்கும் வெள்ளம். நிலச்சரிவுகள், இழப்பீடு செய்வதற்கரிய உயிர் இழப்புகள். மீட்புதவி கேட்கும் குரல்கள். பெருத்த பொருள் சேதம். வீடு வாசல் இழந்து நடுத்தெருவில் நிற்கும் மக்கள்.

இழப்பீடு மற்றும் நோய்த்தொற்று போன்ற அடுத்து வரப்போகும் பிரச்சினைகளை எதிர்நோக்கி கை பிசைந்து நிற்கும் நிர்வாகம்.

ஒட்டு மொத்த மாநிலத்தையே ஒரு சில நாட்களில் புரட்டிப் போட்ட இந்த பேரழிவிற்கு எது காரணம்?
நாத்திகராக இருந்தால் இயற்கைதான் காரணம் என பழி போட்டு விடலாம்.

கடவுள் நம்பிக்கை கொண்ட ரிசர்வ் வங்கி இயக்குனராக இருந்தால் சபரி மலை ஐயப்பன்தான் காரணம் என கடவுள் மேல் பழி போட்டு விடலாம்.

தேர்தலின் போது வீட்டிலிருந்தே ஓட்டுப் போட முடியுமா?

ஆனால் அறிவியலோ, இத்தகைய பேரழிவுகளுக்கு மனிதர்களே காரணம் என காரணங்களை அடுக்குகிறது. இயற்கை மலைகளை அழித்து ரிசார்ட்கள் அமைப்பது. கதறக் கதற ஆற்று மணல் அள்ளுவது.

ஏரி குளங்கள் ஆக்கிரமிப்பு. ஆலை மற்றும் வீட்டுக் கழிவுகளை நீர்நிலைகளில் கலத்தல், நீர்நிலைகள் பராமரிப்பின்மை. ஈவு இரக்கமின்றி காடுகள் அழிப்பு என நாம் எதையும் விட்டு வைக்கவில்லை.

இது ஏதோ கேரளாவிற்கு மட்டுமான அரிதான நிகழ்வா? நிச்சயமாக இல்லை. இந்தியாவில் மட்டும் கடந்த சில வருடங்களை மட்டும் எடுத்துக்கொண்டால், 2013-ல் கேதார்நாத் உள்ளிட்ட வட இந்திய பகுதிகள் சந்தித்த கடும் வெள்ளம்.

கற்க கசடற எந்திர கற்றல்

2014-ன் காஷ்மீர் வெள்ளம், 2015-ன் சென்னை வெள்ளம், 2017-ல் பெங்களூர் உள்ளிட்ட சில பகுதிகளில் உண்டான வெள்ளம், என எத்தனையோ உதாரணங்கள்.

climate modelling

குறுகிய கால அதி-தீவிர மழைப்பொழிவு (Short-duration-rainfall-extremes) என்றழைக்கப்படும் இந்த நிகழ்வுகள், எதிர் வரும் காலங்களில் பல இடங்களில் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என கணித்திருக்கிறார்கள்.

அறிவியல் பூர்வமாக காலநிலை மாற்றங்கள் எவ்வாறு கணிக்கப்படுகின்றன; அதில் பயன்படும் தொழில்நுட்பங்கள் பற்றி பார்ப்போம்.

காலநிலை மாதிரி (Climate Models) என்பது என்ன?

காலநிலை மாதிரி என்பது, புறக்காரணிகளுக்கு, பூமி எவ்வாறு எதிர்வினை ஆற்றும் என உருவகம் (simulation) செய்து பார்க்கும் தொழில்நுட்பம். இந்த மாதிரி (Model), தனக்கு கொடுக்கப்படும் இன்-புட்களை வைத்து, பருவநிலை, காலநிலை மாற்றங்கள் இவற்றை கணிக்கிறது.

காலநிலை மாதிரியின் Inputs மற்றும் outputs

1970-களில் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தை மட்டுமே வைத்து ஆராயப்பட்டு வந்த இந்த மாதிரிகள், FAR, SAR, TAR, AR4, AR5 என படிப்படியாக வளர்ந்து, நில வெளிப்பரப்பு, உறைபனி, sulphates, சமுத்திரங்கள், கார்பன் சுழற்சி, aerosol, நதிகள், தாவரங்கள், வளிமண்டல வேதியியல் என பல்வேறு காரணிகளின் தாக்கங்களை வைத்து உருவகித்து பார்க்கிறது.

நவீன மாதிரிகள் இன்னும் ஒருபடி அதிகமாக, காலநிலை மாற்றத்தால், மனிதர்களின் புலம் பெயர்வு, காடுகள் அழிப்பு இவற்றின் தாக்கங்களைக் கூட கணக்கில் கொண்டு ஸிமுலேஷன் செய்து, பருவநிலை, காலநிலை கணிப்புகளை வெளியிடுகின்றன.

கலாமின் கனவு

இந்த மாதிரியின் outputகளில், பல்வேறு வளிமண்டல அடுக்குகளின் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் கடல் மேல் மட்டத்திலிருந்து, அடிப்பரப்பு வரையிலான வெப்பநிலை, உவர்ப்புத்தன்மை, pH மதிப்பு இவை அடக்கம்.

காலநிலை மாதிரி செயல்படும் முறை

முதலில், கடல், நிலம், வளிமண்டலம் உள்ளிட்ட உலக உருண்டையை, பல கோடி 3D பெட்டிகளாக (3D boxes or cells) பிரித்துக்கொள்கிறது. பின் ஒவ்வொரு பெட்டியின் மீதும், வெப்பநிலை, காற்றழுத்தம், ஈரப்பதம், காற்றின் வேகம் இவற்றின் தாக்கம், விளைவுகள் இவற்றை கணக்கிடுகிறது.

ஒரு காலத்தில், இந்த பெட்டிகளின் அளவு 500 சதுர கிலோமீட்டர் அளவில் பிரிக்கப்பட்டு ஆராயப்பட்டு வந்தது. பெரும் தொழிநுட்ப வளர்ச்சி, கணிணித்திறன் வளர்ச்சி இவற்றால், இப்போது 25 சதுர கிலோமீட்டர் அளவுக்கு குறைந்து, துல்லியமான காலநிலை கணிப்பு சாத்தியப்படும்.

இந்த காலநிலை மாதிரி சில அறிவியல் அடிப்படை விதிகளை பின்பற்றுகிறது.

தெர்மோடயனமிக்ஸின் முதல் விதி (First law of Thermodynamics ):

ஒரு மூடிய அமைப்பில், ஆற்றலை உருவாக்கவோ, அழிக்கவோ முடியாது. ஆற்றல் ஓர் உருவத்திலிருந்து மற்றோர் உருவத்திற்கு மாற மட்டுமே முடியும்.

ஸ்டீஃபென் போல்ட்ஸ்மான் விதி (Stefen-Boltzmann law):

இயற்கை க்ரீன் ஹவுஸ் விளைவின் காரணமாக பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் அதிகமாகிறது.

இணைக்கப்பட்ட கார்கள்

அடுத்து காற்றின் வெப்பநிலைக்கும், அதன் நீராவி அழுத்தத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கும் கிளாசியஸ்-கிளாப்பிரான் சமன்பாடு (Clausius-Clapeyron equation).

அடுத்தது முக்கியமான விதி, திரவப்பொருட்களின் இயக்கத்துக்கான நேவியர்-ஸ்டோக்ஸ் சமன்பாடு (Navier-Stokes Equation). இது வேகம், வெப்பநிலை, வளிமண்டல வாயுக்கள் மற்றும் கடல் நீர் இவற்றின் அடர்த்தி ஆகியவற்றை கணக்கில் கொள்கிறது.

Coupled model intercomparison project (CMIP)

Coupled model intercomparison project என்பது காலநிலை மாற்றத்தைப் பற்றிய நம் அறிவை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு கூட்டு கட்டமைப்பு.

டிஜிட்டல் மார்க்கெட்டிங்

இது காலநிலை மாதிரியை மேம்படுத்தும் நோக்கத்தோடும், சர்வதேச காலநிலை மாற்றங்களைப் பற்றிய மதிப்பீடுகளுக்கு உதவும் பொருட்டும் உருவாக்கப்பட்டது.
காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய ஒரு நிகழ்வைப் பற்றி பார்ப்போம்

Urban Heat Island (UHI)

குறிப்பிட்ட நகரங்களில், வெப்பநிலை அதன் சுற்றுவட்டாரங்களை அதிகமாக காணப்படும் நிகழ்வின் பெயர்
Urban Heat Island. இதற்கு முக்கிய காரணங்கள் மாற்றியமைக்கப்பட்ட மேற்பரப்புகளிலிருந்து வெளியாகும் வெப்பமே.

உதாரணமாக, நகரங்களில் அதிகம் காணப்படும் கான்கிரீட் கட்டடங்கள், தார் சாலைகள், குட்டைப்புல் வெளி, வெற்று மண் தரைகள்.

மேலும் கழிவு வெப்பம் (Waste Heat ) என்றழைக்கப்படும், வாகனங்கள், ஆலைகள், பிற எந்திரங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம். இவை யாவும் UHI -க்கு காரணங்களாக அமைகின்றன.

UHI காலநிலை மாற்றத்துக்கு (Climatic Change) அடிக்கோல் இடுகிறது. வழக்கத்துக்கு மாறான காலங்களில் மழைப்பொழிவு நிகழ காரணமாகிறது. UHI மூலம் ஏற்படும் மேல் நோக்கிய நகர்வு என்ற நிகழ்வு கடும் மழை, இடியுடன் கூடிய மழை இவற்றை ஏற்படுத்துகிறது.

தானியங்கி இல்லத்திற்கு பயன்படும் INTERNET OF THINGS (IOT)
இவ்வாறான தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் கணிக்கப்படும் முக்கிய காலநிலை நிகழ்வுகள், பேரழிவிற்கான சாத்தியக்கூறுகள் இவற்றைக் கொண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, இவை நிகழாமல் தடுக்க வேண்டுமெனில், இயற்கையை அழிக்கும் செயல்களை தவிர்ப்பதும் அவசியம்.

காக்கை,குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும்,மலையும் எங்கள் கூட்டம்;
என்று பாரதி சொன்ன நம் கூட்டத்தை பேணிக்காப்பது நம் கடமை.

மகேஷ் கேசவப்பிள்ளை

(இது இந்த குறுந்தொடரில் இருந்து விடை பெறும் நேரம். இதை எழுத எனக்கு ஊக்கம் அழித்த ஆசிரியர் திரு.கோசல்ராம் அவர்களுக்கும், கட்டுரைகளை வாசித்து, என்னுடன் கருத்துப் பரிமாற்றம் செய்த நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.)

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close