Advertisment

வீட்டில் இருந்தே வேலை பார்க்கின்றீர்களா? அலுவலக தேவைக்கான சிறந்த இணைய சேவை எது?

இது அன்லிமிட்டட் டேட்டாவை வழங்குவதோடு, கூடுதலாக அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ், ஜீ5 ப்ரீமியம், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் போன்றவற்றையும் வழங்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona outbreak check the best broadband services for work from home Airtel,Jio, BSNL

Corona outbreak : check the best broadband services for work from home  : கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தங்களின் அலுவலக ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்கும்படி அறிவித்துள்ளனர். சிறந்த இணைய சேவையை வழங்கும் நிறுவனங்கள் குறித்தும் அவற்றின் பேக்கேஜ்கள் குறித்தும் அறிந்து கொண்டால் நிச்சயம் அது உங்களுக்கு உதவிகரமானதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

Advertisment

Airtel Wi-Fi broadband plans

ஏர்டெல் வழங்கும் பிராட்பேண்ட் சேவைகள் ரூ.799இல் இருந்து ஆரம்பித்து ரூ 3,999 வரை செல்கிறது. ஏர்டெல்லின் அடிப்படை திட்டமான ரூ.799 திட்டம் உங்களுக்கு 150 ஜிபி டேட்டாவையும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சந்தாவையும் வழங்குகிறது. இந்த இணைய சேவையை மூலம் நீங்கள் நொடிக்கு 100 மெகா பைட்ஸ் என்ற வேகத்தில் பெறமுடியும். 150 ஜிபி டேட்டா முடிவுற்றால் மேற்கொண்டு 299 கொடுத்து கூடுதலாக இணைய சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

ஏர்டெல் என்டெர்டெய்ன்மெண்ட் ப்ளானின் கட்டணம் ரூ. 999, இந்த ப்ளான் 300 ஜிபி டேட்டாவை 200Mbps என்ற வேகத்தில் வழங்கிறது. ப்ரிமியம் ப்ளான் ரூ. 1499 ஆகும். இது 500 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் வேகம் 300Mbps ஆகும். இதன் வி.ஐ.பி. ப்ளான் விலை ரூ. 3999. இது அன்லிமிட்டட் டேட்டாவை வழங்குவதோடு, கூடுதலாக அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ், ஜீ5 ப்ரீமியம், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் போன்றவற்றையும் வழங்குகிறது.

Reliance Jio Wi-Fi broadband plans

ஜியோ நிறுவனம் ரூ. 699ல் துவங்கு ரூ. 8499 வரை ப்ளான்களை வைத்து வாடிக்கையாளர்களுக்கு இணைய சேவையை வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இலவச வாய்ஸ் காலிங், ஹோம் நெட்வொர்க்கிங், டி.வி. வீடியோ காலிங், கேமிங் போன்ற பல்வேறு சிறப்பு சலுகைகளை பெறுகிறது.

ஜியோவின் ப்ரோன்ஸ் திட்டத்தின் கட்டணம் ரூ. 699. வழங்கும் டேட்டா 100GB+50GB. வேகம் 100Mbps.  சில்வர் திட்டத்தின் கட்டணம் ரூ. 849. வழங்கும் டேட்டா 200GB+200GB. வேகம் 100Mbps. கோல்ட் திட்டத்தின் கட்டணம் ரூ. 1299. வழங்கும் டேட்டா 500GB+250GB. இத வேகம் 250Mbps.  டையமண்ட் திட்டத்தின் விலை Rs 2,499, வழங்கும் டேட்டா 1250GB+250GB. இதன் வேகம் 500Mbps. ப்ளாட்டினம் திட்டத்தின் விலை Rs 3,999, வழங்கும் டேட்டா 2500GB. இதன் வேகம் 1Gbps. டைட்டானியம் திட்டத்தின் விலை Rs 8,499, இது வழங்கும் டேட்டா 5000GB. இதன் வேகம் 1Gbps.

ஜியோ இந்த திட்டங்கள் மட்டுமல்லாது, காலாண்டு, அரையாண்டு, ஆண்டு திட்டங்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

YOU Wi-Fi broadband plans

வோடஃபோன் நிறுவனத்தின் சப்சிடியரியான யூ நிறுவனம் நான்கு திட்டங்களை வைத்துள்ளது. இது நாம் வாழும் ஏரியாக்களை பொறுத்து மாறுபடுகிறது. கூர்கானில் நான்கு திட்டங்களை கொண்டுள்ளது. நவி மும்பையில் இரண்டு திட்டங்களை கொண்டுள்ளது. இதன் வேலிட்டிகள் பொதுவாக 90 நாட்கள் மட்டுமே.

BSNL broadband plans

பி.எஸ்.என்.எல். நிறுவனம் மாதத்திற்கு ரூ. 349 முதல் ரூ. 2349 வரையிலான திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதன் வேகம் 8 எம்.பி.பி.எஸில் இருந்து 24 எம்.பி.பி.எஸ் வரையில் மாறுபடும்.  BSNL’s Rs 349 திட்டம் நாள் ஒன்றுக்கு 2GB-வை 8Mbps என்ற வேகத்தில் வழங்குகிறது. இதே வசதிகளுடன் கூடுதலாக அன்லிமிட்டட் கால்களை தருகிறது Rs 399 திட்டம். Rs 499 திட்டம் நாள் ஒன்றுக்கு 3GB டேட்டாவை 10Mbps என்ற வேகத்தில் வழங்குகிறது. Rs 599 திட்டம் நாள் ஒன்றுக்கு 4GB டேட்டாவை 10Mbps என்ற வேகத்தில் வழங்குகிறது. Rs 699 என்ற திட்டம் நாள் ஒன்றுக்கு 5GB டேட்டாவை 10Mbps என்ற வேகத்தில் வழங்குகிறது. Rs 899 திட்டம் 12GB டேட்டாவை 10Mbps என்ற வேகத்தில் நாள் ஒன்றுக்கு வழங்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Jio Bsnl Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment