Advertisment

இங்கிலாந்து நாட்டின் இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ

இன்று இரவு விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டிற்கு தொடங்கியது கவுண்ட்டவுன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இஸ்ரோ, S1-4 சாட்லைட், நோவாசார்

S1-4 சாட்லைட் & நோவாசார்

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறது இஸ்ரோ .

Advertisment

பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலமாக இரண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறது இந்திய விண்வெளி மையம். இதற்கான கவுண்ட்டவுன் (15/06/2018) நேற்று மதியம் 1.08 மணி அளவில் தொடங்கியது. இந்த ராக்கெட் இன்று இரவு சரியாக 10.08 மணி அளவில் விண்ணில் பாய்கிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட இருக்கும் இந்த பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் சர்ரே சாட்லைட் டெக்னாலிஜீஸ் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனத்தின் செயற்கைக் கோள்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஆண்ட்ரிக்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இஸ்ரோ நிறுவனம் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தத்தின் படி இந்த செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : To read this article in English

இந்த இரண்டு செயற்கைக் கோள்களும் விண்ணில் சுமார் 583 கிமீ தூரத்தில் நிலை நாட்டப்படும் என்றும், 44 மீட்டர் நீளம் கொண்டுள்ள ராக்கெட் சுமார் 17 நிமிடங்கள் 44 நொடிகளில் விண்ணில் செயற்கைக் கோளை நிலை நிறுத்தும் என்றும் கூறியிருக்கிறது இஸ்ரோ.

இஸ்ரோ அனுப்பும் இரண்டு செயற்கைக்கோள்கள்

நோவாசார் (NovaSAR) என்ற 445 கிலோ எடையுள்ள சிந்தெண்டிக் அபெர்ச்சர் ராடார் சேட்லைட் ( S-Band Synthetic Aperture Radar satellite) காடுகள், மலை முகடுகள், வெள்ளம் மற்றும் பேரழிவு குறித்து ஆய்வுகளை நடத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டது.

S1-4 சாட்லைட் (Optical Earth Observation Satellite)  444 கிலோ கிராம் எடை கொண்டதாகும். கால நிலை மாற்றம் மற்றும் ஊரக வளர்ச்சி தொடர்பான தகவல்களைப் பெற இந்த செயற்கைக் கோள் உருவாக்கப்பட்டது. இந்த இரண்டு ராக்கெட்டுகளும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment