டா வின்சியின் கண்டுபிடிப்புகள்! பிரமிப்பின் உச்சம்!

அவர் சராசரி மனிதன் தானா என்ற கேள்வி நமக்குள்ளும் எழுகிறது

லியோ

Anemometer, Flying Machine, Helicopter, 33 – Barreled Organ, Parachutes இது போன்ற பெயர்கள் நாம் அன்றாட வாழ்வில் அனுதினம் கேட்டு சலித்ததே. ஆனால் இதை 1400ஆம் ஆண்டின் இறுதியிலே உலகமே வியந்து பார்த்த ஒரு தனி மனிதன் கண்டுபிடித்து, அதற்கான பொறியியல் வடிவங்களை அலகுகளோடு தந்திருக்கிறார் என்று கூறினால் உங்களால் நம்மமுடிகிறதா?. நம்புங்கள் இக்கட்டுரையில் நான் கூறவிருப்பது அந்த மாமனிதனை பற்றித்தான்.

ஏப்ரல் மாதம் 15ஆம் நாள் 1452இல் இத்தாலி நாட்டில் பிறந்தார் டா வின்சி என்று பெற்றோர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட லியோனார்டு டீ செர் பீரோ டா வின்சி (Leonard di ser piero Da vinci). பிறப்பிலே அறிஞராக திகழ்ந்த இவர் இதுவரை உலக வரலாற்றில் பதிவான மேதைகளில் முதன்மையானவர். இவ்வாறு நான் கூற காரணம் இவர் செய்த புரட்சியே, அப்படி என்ன புரட்சி கண்டார் என்று வினைவோர்க்கு இவர் சாதித்த துறைகளே சாட்சி. ஓவியம், சிற்பக்கலை, அறிவியல், இசை, கணிதம், பொறியியல், இலக்கியம், உடற்கூறியல்(anatomy), நிலவியல்(geology), வரலாறு, நிலப்படக்கலை (cartography) என மிக குறிகிய காலத்தில் பல துறைகளில் சாதனை புரிந்தார். மதம் சார்ந்து இவர் வரைந்த சர்ச்சைக்குரிய ஓவியங்கள் மட்டும் அல்லாது, பொறியியல், அறிவியல் சார்ந்து இவர் தந்த அற்புதங்கள் பல.

இவர் வடிவமைத்த பொறியியல் சாதனங்கள் எதற்கு பயன்படும், ஏன் அது என்னவென்று கூட அறியாதிருந்தனர் அன்றைய கால மக்கள். அப்படி என்ன சாதனங்கள் அவை, இதோ விடை தருகிறேன் அந்த ஆச்சர்யங்களுக்கு.

Self-Propelled Car

தானியங்கி வாகனம், 1885ஆம் ஆண்டு கார்ல் பென்ஸ் (Karl Benz) என்பவரால் கண்டுபிடிக்க பட்டதாக நாம் நினைக்கும் கார்களுக்கு முன்பே 1500ஆம் ஆண்டின் முற்பாதியிலே அதை விட அதிநவீன கார் ஒன்றை அவர் கண்டறிந்தார். அவை தானியங்கி கார்களாக திகழ்ந்தன. அந்த கார்கள் தயாரிப்பிற்கான அனைத்தையும் அவர் தந்துள்ளார். அளவு, பொருட்கள் என அனைத்தையும் அவர் தந்தும், தற்கால தொழில்நுட்ப வல்லுனர்கள் அதை உருவாக்க தயங்குகிறார்கள் என்பது வியப்பை தருகிறது.

Aerial Screw

1940ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஹெலிகாப்டரின் முன்னாடியே இந்த Aerial Screw என்னும் சாதனம். திருகுவிசை என்றல் என்னவென்று யாரும் அறிந்திராத காலகட்டத்திலே, அதை பற்றி ஆராய்ந்து அதை ஒரு பொருளை சுமந்து பறக்கக்கூடிய அளவிற்கு உந்துவிசையோடு கண்டறிந்தார் டா வின்சி. இவர் கண்டறிந்த அந்த வாகனம் 15 அடி அகலம் கொண்டதாக ஒரு கூற்றும் நிலவுகிறது. அவர் எப்படி இதை கண்டறிந்தார் என்பதை விட அக்காலகட்டத்தில் இதை போன்ற கண்டுபிடிப்புகளை எப்படி சிந்தித்தார் என்பதே மிக பெறிய ஆச்சர்யம்.

33 – Barreled Organ

Richard Gatlin என்பவரால் 1860ஆம் கண்டறிய பட்டது Gatlin எனப்படும் ஒரு துளை கொண்ட துப்பாக்கிகள், ஆனால் 1502 ஆம் ஆன்டே 33 துளைகை கொண்ட ஒரு நகரும் பீரங்கியை கண்டறிந்தார் இந்த மனிதர். ஒரே முறையில் 33 துளைகளை இயக்கி சுடக்கூடியதா அதை வடிவமைத்தார். இந்த கண்டுபிடிப்பை நிதர்சனம் செய்ய வழியின்றி இன்று ஆராய்ந்து வருகின்றனர் இக்கால வல்லுனர்கள்.
வேறும் 67 ஆண்டுகளில் அவர் கண்ட உயரங்கள் பல. colossus என்று பலராலும் அழைக்கப்படும் 8 டன் எடை கொண்ட 24 அடி உயர குதிரை முதல் 81 அடி தூரம் வரை திசைக்கு மூன்று என்று நான்கு திசையிலும் அம்புகளை ஏவக்கூடிய cross bow எனப்படும் வில் அம்புவரை அவர் தெரிவித்த கண்டுபிடிப்புகள் வியப்பில் ஆழ்த்துகின்றன. தற்கால அறிஞர்கள் பலர் இவரை வேற்றுகிவாசி என்று அழைப்பதும் உண்டு. சிந்தனைக்கு எட்டாத விஷயங்கள் மட்டுமே இவர் சிந்தையில் உதித்தது.

அறிவியல் உச்சம் பெற்ற 2018ஆம் ஆண்டில், ஒரு தனி மனிதனின் நினைவாற்றல் என்பது 70 முதல் 120 என்ற விகிதமே சராசரியா உள்ளது. ஆனால் 1452ஆம் பிறந்த ஒரு மனிதனுக்கு 180 முதல் 200 வரை நினைவாற்றல் இருந்திருக்கிறது என்றால் அவர் சராசரி மனிதன் தானா என்ற கேள்வி நமக்குள்ளும் எழுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close