டிஸ்னி + (பிளஸ்) பொழுதுபோக்கு நிறுவனம் செலவீனக் குறைப்பு நடவடிக்கையாக 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்து முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். ட்விட்டர், மெட்டா, மைக்ரோசாப்ட் உள்பட பல ஐ.டி நிறுவனங்கள் உலகப் பொருளாதார வீழ்ச்சி அதன் தொடர்ச்சியாக வருவாய் இழப்பு காரணமாக பணி நீக்கம், சம்பளக் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்படும் ஜூம் செயலி நிறுவனம் தனது 15 சதவீத ஊழியர்கள் அதாவது 1300 ஊழியர்களை நேற்று பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி + சமீபத்தில் தனது காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிட்ட பிறகு பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சப்ஸ்க்ரைபர்கள் எண்ணிக்கை சரிவு
டிஸ்னி + சந்தாதாரர்கள் எண்ணிக்கை கடந்த காலாண்டில் குறைந்துள்ளது. இதனால் வருவாய் ஏற்பட்டுள்ளது. ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி பிளஸ் அமெரிக்காவிலும் கனடாவிலும் 200,000 சந்தாதாரர்களை மட்டுமே கடந்த ஆண்டில் சேர்த்துள்ளது. அதன் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 46.6 மில்லியன் ஆகும்.
டிஸ்னி + அதன் போட்டி நிறுவனங்களை விட குறைந்த அளவிலான வளர்ச்சியை பெற்றதாக கூறியுள்ளது. சி.இ.ஓ ஐகர் கூறுகையில், நாங்கள் இந்த முடிவை சுலபமாக எடுக்கவில்லை. உலகெங்கிலும் உள்ள எங்கள் ஊழியர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்பு மீது நாங்கள் மரியாதை கொண்டுள்ளோம். இருப்பினும் இந்த கடினமான முடிவு எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் மூலம் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு செலவுகளை குறைக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/