Advertisment

கனநீர் மூலம் இயங்கி ஆக்சிஜனை வெளியிடும் இஞ்சின்: ஜப்பானை கலக்க உள்ள தமிழரின் கண்டுபிடிப்பு

இவர் 10 ஆண்டுகள் கடின உழைப்பின் பயனாக கனநீரின் மூலம் இயங்கும் இஞ்ஜினை வடிவமைத்துள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
distilled water engine japan coimbatore engineer Sounthirajan Kumarasamy - கனநீர் மூலம் இயங்கி ஆக்சிஜனை வெளியிடும் எஞ்சின்: ஜப்பானை கலக்க உள்ள தமிழரின் கண்டுபிடிப்பு

distilled water engine japan coimbatore engineer Sounthirajan Kumarasamy - கனநீர் மூலம் இயங்கி ஆக்சிஜனை வெளியிடும் எஞ்சின்: ஜப்பானை கலக்க உள்ள தமிழரின் கண்டுபிடிப்பு

கோவையை சேர்ந்த சவுந்திராஜன் குமாரசாமியின் கண்டுபிடிப்பான கனநீரின் மூலம் இயங்கி ஆக்சிஜனை வெளியிடும் இஞ்சின், விரைவில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Advertisment

கோவையை சேர்ந்த மெக்கானிக்கல் இஞ்ஜினியர் சவுந்திராஜன் குமாரசாமி. இவர் 10 ஆண்டுகள் கடின உழைப்பின் பயனாக கனநீரின் மூலம் இயங்கும் இஞ்ஜினை வடிவமைத்துள்ளார்.

இந்த இஞ்ஜின், ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கி ஆக்சிஜனை வெளியிடும். சுற்றுப்புற சூழ்நிலைக்கு அதிஅற்புதமான கண்டுபிடிப்பாக இது விளங்கப்போவதாக சவுந்திராஜன் அறிவித்திருந்தார். இந்த இஞ்ஜினை, அவர் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்காக பல்வேறு அரசு அதிகாரிகளை நாடினார். யாரும் செவி கொடுத்து கேட்காததால் சவுந்திராஜன் விரக்தியடைந்தார்.

தற்போது அவரது கண்டுபிடிப்புக்கு ஜப்பான் அங்கீகாரம் அளித்தது. விரைவில் ஜப்பானில் தனது கண்டுபிடிப்பை சவுந்திராஜன் அறிமுகம் செய்ய உள்ளார்.

உலகிலேயே, சுற்றுப்புற சூழலுக்கு அதிமுக்கியமான ஆக்சிஜனை வெளியிடும் வகையில் இந்த எஞ்சின் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சவுந்திராஜன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment