Advertisment

ட்விட்டர் இனி எங்கிட்ட:  பொறுப்பேற்றதுமே சிஇஓ-க்கு டிஸ்மிசல் ஆடர் கொடுத்த எலான் மஸ்க்

இந்நிலையில் இவரது இந்த நடவடிக்கை ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் பெறும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இனி ட்விட்டரில் கருத்து சுதந்திரம் அதிகமாக இருக்கும் என்று எலான் மஸ்க் கூறினாலும். உலக பணக்காரர் கையில் இது செல்வதால், கருத்து சுதந்திரத்திற்கு இடம் இருக்காது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
'இனி எச்சரிக்கை இல்லை.. நிரந்தர தடை' : எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி என்ன?

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், அதன் சிஇஓ பராக் அகர்வாலை  பணி நீக்கம் செய்துள்ளார்.

Advertisment

’ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தை தொடங்கியவர் எலான் மஸ்க். மேலும் கனரக மின்வாகனங்களை உற்பத்தி செய்யும் ’டெஸ்லா’ நிறுவனத்தையும் அவர் வாங்கினார். கிட்டதட்ட எல்லா துறைகளிலும் தனது தடத்தை பதிக்க வேண்டும் என்று நினைப்பவர் எலான் மஸ்க். அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்-யை நக்கலாக விமர்சித்தவர். மேலும் இவரது வெளிப்படையான கருத்துக்களுக்கு பல விமர்சனங்களும் வந்துள்ளது.

இந்நிலையில் எலான் மஸ்க் ட்விட்டர் வாங்குவதாக முன்னர் அறிவித்தார். ஆனால் அதை கைவிடுவதாக அவர் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். இந்நிலையில் நேற்று அவர் டிவிட்டர் நிறுவனத்தின் அலுவகலத்திற்குள் கை கழுவும் சிங்க்-யுடன் உள் நுழைந்தார். “Let that sink in”  என்ற வாசகத்துடன் அதை ட்விட்டரில் பதிவிட்டார்.

இந்நிலையில் அவர் ட்விட்டர் நிறுவனத்தை முழுதாக கையப்படுத்தியதும். முதலாவதாக சிஇஓ பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தார். ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்தார்.

இந்நிலையில் இவரது இந்த நடவடிக்கை ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் பெறும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இனி ட்விட்டரில் கருத்து சுதந்திரம் அதிகமாக இருக்கும் என்று எலான் மஸ்க் கூறினாலும். உலக பணக்காரர் கையில் இது செல்வதால், கருத்து சுதந்திரத்திற்கு இடம் இருக்காது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment