எந்த பக்கம் திரும்பினாலும் இவங்க தொல்ல தாங்கல... ஃபேஸ்ஆப் அலப்பறைகள்!

நட்சத்திரங்களும் இதற்கு விதி விலக்கல்ல. அனைவரும் இந்த ஃபேஸ்ஆப்பிற்கு மயங்கியேவிட்டனர்.

FaceApp Old filter Fun and Trend : இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர்னு எந்த பக்கம் திரும்புனாலும் நம்மோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஓல்ட் கெட்டப்ல சுத்திட்டு இருக்காங்க…. என்னடா இது நமக்கு மட்டும் என்றும் இளமை, மார்க்கெண்டேயன் மாதிரி வரம் ஏதாவது வாங்கிட்டு வந்துட்டோமான்னு கேள்வி கூட கேக்கனும்னு தோணுது… இதுக்கெல்லாம் காரணம் இந்த ஃபேஸ்ஆப் தான். ஃபேஸ்ஆப் 2017ம் ஆண்டே அறிமுகம் ஆகிருந்தாலும், ஓல்ட் ஆன மாதிரியான ஃபில்டர்கள் சமீபத்தில் தான் வெளியாகியுள்ளன.

FaceApp Old filter images go viral on social media

இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் தங்களின் புகைப்படங்களை ஃபேஸ்ஆப்பில் பயன்படுத்தி வயதானவர்கள் தோற்றத்தில் தங்கள் புகைப்படங்களை பெற்று அதனை ஷேர் செய்து வருகின்றார்கள். நட்சத்திரங்களும் இதற்கு விதி விலக்கல்ல. அனைவரும் இந்த ஃபேஸ்ஆப்பிற்கு மயங்கியேவிட்டனர்.

இதை ஏதோ விளையாட்டிற்கு தான் நாம் செய்கின்றோம் என்றாலும் கவனம் தேவை. ஏன் என்றால் இந்த ஆப்பில் நம்முடைய தனிப்பட்ட விபரங்களை தருகின்றோம். அதனால் எந்த ஆப்பாக இருந்தாலும் யோசித்து அப்லோட் பண்ணுங்கன்னு அட்வைஸூம் தருகின்றார்கள்.

மேலும் படிக்க : ஃபேஸ் ஆப்: வருண் தவான், அர்ஜூன் கபூர் வயதானால் இப்படி தான் இருப்பார்கள்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close