பேஸ்புக்கின் ‘டவுன்வோட்’ வசதி குறித்து தெரியுமா?

நியூஸ்ஃபீடில் தோன்றும் சில வீடியோக்கள், போஸ்ட்டுகளை யூசர்கள் விரும்பவில்லை (dislike) என்பதை தெரியப்படுத்தும் வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் ‘டவுன்வோட்’ (Downvote) என்ற புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

நாடு முழுவதும் கோடிக்கணக்கான யூசர்களை கொண்டுள்ள ஃபேஸ்புக், இன்றைய தலைமுறையினருக்கும் மிகவும் பிடித்த ஒரு செயலி. பள்ளி பருவ நண்பர்களை இணைப்பதில் துவங்கி, அரசியல், சமூக சேவை, குற்றம், காதல், வைரல், மீம்ஸ் என அனைத்தையும் நொடி பொழுதில் நம் கண் முன் நிறுத்தும் தொழில்நுட்ப சக்தி இந்த ஃபேஸ்புக்கிற்கு இருக்கிறது. இப்படி வளர்ந்தும் வரும் தொழில்நுட்ப உலகில் அதிவேகத்துடன் அப்டேட் ஆகி வரும் பேஸ்புக் செயலியில் நியூஸ் ஃபீட் பக்கத்தில் சமீப காலமாக பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவு, தற்போது பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. வருங்காலங்களில் இந்த நியூஸ் ஃபீட் பக்கம் முழுவதுமாக மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்நிறுவனம் யூசர்களை கவரும் வகையில் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.

இதுவரை ஃபேஸ்புக்கில் வீடியோக்கள், போஸ்ட்கள், புகைப்படங்கள், லைவ் ஆகியவற்றை யூசர்கள் பார்க்கும் போது பிடித்திருந்தால் லைக் பட்டன், கோபம் வந்தால் ஆங்கிரி எமோஜி, அதிக விருப்பம் என்றால் ஹார்ட் குறியீடு இதுப்போன்ற எமோஜிகள் வடிவில் தங்களின் விருப்பங்களை தெரிவித்து வந்தனர். ஆனால் லைக் வசதி போல் டிஸ்லைக் செய்யும் வசதி இதுவரை ஃபேஸ்புக் பக்கத்தில் இல்லாமல் இருந்தது.

இந்த குறையை தீர்க்கும் வகையில் தற்போது, அந்நிறுவனம் ’டவுன்வோட்’ என்ற டிஸ்லைக் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த வசதிக்கான முதற்கட்ட ஆய்வு தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக அங்குள்ள ஃபேஸ்புக் யூசர்களான ஒரு சிலருக்கு இந்த வசதியை முதலில் ஏற்படுத்தி தந்துள்ளது. இந்த வசதி தற்போது பப்ளிக் போஸ்டுகளில் கமெண்ட்களை மட்டுமே டிஸ்லைக் செய்ய பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டவுன்வோட் வசதி, வெறும் டிஸ்லைக்கு மட்டும் பயன்படுத்தபடாமல், ஏன் பிடிக்கவில்லை? என்பது போன்ற சில புதுமையான விரிவாக்கத்துடன் ஃபேஸ்புக்கில் விரைவில் இடம்பெறவுள்ளது.

×Close
×Close