Advertisment

உங்களுக்கு ஆர்வமான தகவல்களை அள்ளிக் கொட்டும்: ஃபேஸ்புக் லேட்டஸ்ட் அப்டேட்

பயனர்கள் யாராவது ஓர் செய்தியைப் பகிரும்போதும் அல்லது ரீஷேர் செய்யும்போதும் ‘நியூஸ் ஃபீட்டில் அதற்குத் தொடர்புடைய கலந்துரையாடல்களை’ காணலாம்.

author-image
WebDesk
New Update
Facebook new feature tamil news

Facebook Latest Update Tamil News

Facebook Latest Update Tamil News: பயனர்கள் தங்கள் நியூஸ் ஃபீட்டில் (News Feed) ‘பொதுக் குழுக்களின் (Public Groups)’ உரையாடல்களைக் கண்டறிய புதிய அம்சத்தைச் சோதனை செய்யப் போவதாக கடந்த வியாழக்கிழமை ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும், குழுவின் அட்மின்கள், அவர்கள் தேர்ந்தெடுக்கும் செய்திகளை மட்டுமே வெளியிடும் சிறப்பு அம்சத்தையும் இணைத்திருக்கிறது. "ஒவ்வொரு மாதமும் 1.8 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஃபேஸ்புக் குழுக்களைப் பயன்படுத்துகின்றனர். மேலும், மக்கள் தங்களுக்குப் பிடித்த விஷயங்கள் பற்றிப் பேசவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், வெவ்வேறு மக்களோடு புதிய உறவுகளை ஏற்படுத்தவும் பல்லாயிரக்கணக்கான ஆக்டிவ் சமூகங்கள் ஃபேஸ்புக்கில் உள்ளன" என்று ஓர் பிலாகில் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

Advertisment

மேலும், "தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் தவறான தகவல்களைக் குறைப்பதற்கும் ஃபேஸ்புக் சில மாற்றங்கள் செய்துள்ளது" என்றும் அந்த பிலாகில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய சமூகங்களைக் கண்டுபிடித்து இணைப்பதற்குப் பயனர்களுக்கு உதவ, ஃபேஸ்புக்கிலும் அதற்கு வெளியையும் பொதுக் குழுக்களின் உரையாடல்களைக் கண்டறிய புதிய வழிகளைச் சோதிக்கத் தொடங்கியுள்ளது.

பயனர்கள் யாராவது ஓர் செய்தியைப் பகிரும்போதும் அல்லது ரீஷேர் செய்யும்போதும் ‘நியூஸ் ஃபீட்டில் அதற்குத் தொடர்புடைய கலந்துரையாடல்களை’ காணலாம் என்றும் ஃபேஸ்புக் மேலும் கூறியது.

"இது உங்களுக்குப் பிடித்த அல்லது சம்பந்தப்பட்ட உள்ளடக்கத்தைப் பற்றி மற்ற குழுக்கள் என்ன சொல்கின்றனர் என்பதைப் பார்க்க உதவும்" என்றும் பதிவு செய்துள்ளது.

குழுக்கள் தலைப்பிற்குக் கீழ், பயனர்கள் தங்கள் விருப்பத்துடன் தொடர்புடைய பொதுக் குழுக்களின் போஸ்ட்களையும், பொதுக் குழுக்கள் முழுவதும் பிரபலமான போஸ்ட்களையும் பரிந்துரைக்கப்படுவதைக் காணலாம். கம்யூனிட்டி அனுமதிக்கும் வரை குழுவில் சேராமலும் பயனர்கள் உரையாடலில் பங்கேற்கலாம்.

"அட்மின்கள் தங்கள் குழு அமைப்புகளின் மீது இன்றும் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர். அட்மினின் ஒப்புதல் இல்லாமல் யார்  போஸ்ட் மற்றும் கருத்து தெரிவிக்கலாம் போன்ற ஆப்ஷன் அதில் அடங்கும். மேலும், அவர்கள் போஸ்ட் செய்வதற்கு முன்பு குழு விதிகளை மக்களுக்குக் காண்பிப்போம், இதனால் சமூக கலாச்சாரம் வலுவாக இருக்கும். புதிய 'அட்மின் உதவி' அம்சம் குறிப்பிட்ட வகை போஸ்ட்களை கட்டுப்படுத்துவதையும் எளிதாக்குகிறது"என்று பிலாகில் பதிவிடப்பட்டுள்ளது.

வரவிருக்கும் மாதங்களில் இந்த மாற்றத்தைச் சோதிக்கத் தொடங்கும் போது, அட்மின்கள் தங்கள் குழுக்களை இந்த புதிய பொதுக் குழுவில் சேர்க்க விருப்பம் தெரிவிக்கும் ஆப்ஷன் இருக்கும்.

"தெரிவுசெய்தல் செயல்பாட்டின் போது, உங்கள் குழுவிற்கான பிந்தைய ஒப்புதல்களை நீங்கள் இயக்க முடியும். இது புதிய உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உட்பட அனைவருக்கும் பொருந்தும்" என்றும் கூறியது.

கடந்த சில மாதங்களில், ஃபேஸ்புக் குழுக்களை உருவாக்குவதிலும் நடத்துவதிலும் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் குறிப்பிட்டுள்ள ஃபேஸ்புக், அதன் புதிய அம்சங்கள் அட்மின்களை தங்கள் குழுக்களை மிகவும் திறமையாக நிர்வகிக்க உதவும் என்றது.

அட்மின்கள் இப்போது சில முக்கிய சொற்களைக் கொண்ட போஸ்ட்களை நிராகரிக்கலாம் அல்லது குழுவில் நீண்ட காலமாக இல்லாதவர்கள் மற்றும் கடந்த காலங்களில் ரிப்போர்ட் பதிவாகிய நபர்களை நீக்கலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Facebook
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment