ஃபேஸ்புக் நிறுவனத்தின் ’வாய்ஸ் க்ளிப்ஸ்’ ஸ்டேட்டஸ் விரைவில் அறிமுகம்!

இந்தியாவில் இந்த வாய்ஸ் க்ளிப்ஸ் ஸ்டேட்டஸ் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இனி வரும் காலங்களில் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில், வாய்ஸ் க்ளிப்ஸ் மூலமாக ஸ்டேட்டஸ் வைக்கும் வசதியை அந்நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

இன்றைய கேஜட்ஸ் இளைஞர்கள் நாள்தோறும் ஃபேஸ் புக் மற்றும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் மாற்றும் பழகத்தை தவறாமல் கைப்பிடித்து வருகின்றனர். ஒரு நாள் மறந்தோ அல்லது நேரம் இல்லாமையால் வாட்ஸ்  அப் ஸ்டேட்டஸை  மாற்றாமல் போனால் அதற்காக வருத்தப்படும் சிலரையும் இன்றைய தொழில் நுட்ப உலகில் பார்க்க முடிகிறது.

அந்த வகையில், வீடியோ மற்றும் புகைப்படம் மூலமாக ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் வைப்பதற்கு பதிலாக இனி, வாய்ஸ் க்ளிப்ஸ்களையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வசதி விரைவில் வரவுள்ளது. தினந்தோறும் ஸ்டேட்டஸ் மாற்றுவதை வழக்கமாக வைப்பவருக்கும் இந்த செய்தி மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளது.

ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் தற்போது ஃபோட்டோ, வீடியோ, கலர்ஃபுல் எழுத்துக்கள், எமோஜிகள்  வைக்கப்பட்டு வருகின்றன. இனி வரும் காலங்களில் தங்களில் குரல்களை பதிவு செய்து அதையும் ஸ்டேட்டஸாக வைத்துக் கொள்ளலாம். இந்த அப்டேட்டுக்கான ஆராய்ச்சி பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கூடிய விரைவில் இந்தியாவில் இந்த வாய்ஸ் க்ளிப்ஸ் ஸ்டேட்டஸ் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

×Close
×Close