இதை செய்ய ஃபேஸ்புக்கால் எப்படி முடிந்தது??? அடுத்த குறி இந்தியாவிற்கா?

இந்த பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது

ஃபேஸ்புக் நிறுவனம், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு அளித்த யூசர்களின்  தகவல்களுக்கு பின்பு  நடந்த முறையற்ற பரிமாற்றம் குறித்து திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மார்ச் மாதத்தை ஃபேஸ்புக் நிறுவனத்தால் எளிதில் மறந்து விட முடியாது. எவ்வளவு சர்ச்சைகள்.. எவ்வளவு கேள்விகள்.. யூசர்களுக்கு ஃபேஸ்புக் மீது இருந்த அதிகப்படியான நம்பிக்கை சுக்கு நூறாக உடைந்தது.  அமெரிக்காவில் நடந்ததே இந்த நிகழ்வே, இந்தியா வரை வெடித்தது என்றால், இந்திய யூசர்களுக்கு இப்படி நடந்திருந்தால்,  இப்போது ஃபேஸ்புக் என்ற ஆப் இருக்குமா என்பதே சந்தேகமாகவுள்ளது.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் அரசியல் ஆலோசனை நிறுவனத்த்திற்கு, ஃபெஸ்புக் நிறுவனம், அமெரிக்க யூசர்களின்   தகவல்களை முறைகேடாக அளித்துள்ளதாக சர்ர்சை எழுந்தது. அதிபர் தேர்தலில் டெனால்ட் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இந்த முறைகேடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்பு, இந்த தகவல் வதந்தி பொய்யில்லை உண்மை தான் என்பதை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கே ஒப்புக் கொண்டார். மேலும், இதுப்போன்ற செயல்கள் நடந்ததிற்கு அனைவரிடமும் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார். இந்நிலையில், அமெரிக்கா மட்டுமின்றி ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுளகளிலும் நடைபெற்ற தேர்தல்களில் அனலிட்டிகா நிறுவனம் இதே போன்ற முறைகேடுகளை நடந்த்தியுள்ளதும் அம்பலமாகியுள்ளது. இந்தியாவிலும் சில தேர்தல்களில் அனலிட்டிகா நிறுவனத்தின் பங்களிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பெரிய பூதாகரமாக வெடித்துள்ள இந்த சர்ச்சையின் பின்னாடி, பல உண்மைகள் மறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.  இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான மற்றொரு தகவலும் பொதுமக்களை வியப்படைய வைத்துள்ளது. இதுவரை  மொத்தம் 8.7 கோடி அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்கள் முறையற்ற வகையில் பகிரப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. மேலும்,  இதில் அமெரிக்க மட்டுமில்லாமல் இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளும் உள்ளடங்கும்  என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் மூத்த தொழிற்பிரிவு அதிகாரி மைக் ஷ்ரோப்பர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, “  இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 11 லட்சம் பயனாளர்களின் தகவல்களும் பகிரப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு இந்த தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க சில நடவடிக்கைகளை ஃபேஸ்புக் மேற்கொண்டு உள்ளது’’ எனக் கூறினார்.

அதனைத்தொடர்ந்து, ஃபேஸ்புக் அடுத்ததாக  இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் இதுக் குறித்து ஃபேஸ்புக் உயர்மட்ட அதிகாரி குழுவுடன்  ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள கர்நாடகா, மத்திய பிரதேச, ராஜஸ்தான், சண்டிகர் போன்ற மாநிலங்களில் கூடிய விரைவில்  தேர்தல் நடைப்பெறவுள்ளது. இந்த தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனம் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2018 ஆம் ஆண்டில் இந்தியாவை தொடர்ந்து, பாகிஸ்தான், பிரேசில், மெக்சிகோ போன்ற உலக நாடுகளும் தேர்தல் சந்திக்க உள்ளனர். முன்பு ஏற்பட்ட பிழை மீண்டும் ஏற்படாமல் தவிர்க்க ஃபேஸ்புக் யூசர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க பல்வேறு வசதிகளை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இந்த முயற்சிக்கு  ஃபேஸ்புக் ஊழியர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்று மார்க் தெரிவித்துள்ளார். தேர்தலின் போது யூசர்களின்ன் எந்தவித தனிப்பட்ட தகவலும் வெளியாகமல் இருக்க ரகசியமாக பல்வேறு முயற்சிகள் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

×Close
×Close