டிஜி யாத்ரா : விமான நிலையங்களுக்கு வருகிறது பயோமெட்ரிக் அடையாள அட்டை

ஏப்ரல் மாதம் 2019ம் ஆண்டிற்குள் முக்கிய விமான நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்

டிஜி யாத்ரா திட்டம் : இனி மேல் விமானங்களின் பயணிக்கும் பயணிகளின் ஒவ்வொரு அடையாளத்தினையும் சேமித்து வைக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம். முதல் கட்டமாக பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் வருகின்ற பிப்ரவரி மாதம் 2019ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப் படுகிறது.

எங்கே அறிமுகமாகிறது டிஜி யாத்ரா ?

கொல்கத்தா, வாரணாசி, புனே, மற்றும் விஜயவாடா விமான நிலையங்களில் 2019 ஏப்ரல் முதல் இத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டிஜி யாத்ரா” என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இத்திட்டத்தில் தங்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண், மற்றும் அடையாள அட்டைகளில் ஒன்றினை சமர்பித்து டிஜி யாத்ராவின் அடையாள அட்டையை பயணிகள் வாங்கிக் கொள்ள வேண்டும்.

எப்படி செயல்படும் டிஜி யாத்ரா திட்டம் ?

டிக்கெட் புக் செய்யப்படும் போதே டிஜி யாத்ரா ஐடி க்ரியேட் செய்யப்படும். விமானத்தில் பயணிப்பதற்கு முன்பாக பயணிகளின் கையில் தரப்படும். விமான நிலையங்களில் வைக்கப்பட இருக்கும் பயோமெட்ரிக் சிஸ்டத்தில் தங்களின் முக அடையாளத்தினை பயணிகள் ஒரு முறை பதிவு செய்வது அவசியமாகிறது. அப்படி ஒரு முறை பதிவு செய்யப்பட்ட பின்பு பயணியின் ஃப்ரோபைலில் அது பாதுகாக்கப்படும்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இதில் பதிவு செய்து கொண்ட ஒரு பயணி இ – கேட் வழியாக டிக்கெட்டினை ஸ்கேன் செய்து கொள்ளலாம். அப்படி செய்யும் போது PNR மற்றும் பயணியின் முக அடையாளம் என இரண்டையும் சேர்த்து ஒரு டோக்கனை ஜெனரேட் செய்யும் என்று இத்திட்டம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close