Advertisment

Flipkart Big Billion Days sale: இந்த ஐபோன்களுக்கு அதிரடி ஆஃபர்.. மற்றும் பல!

Flipkart Big Billion Days விற்பனை இந்த மாதத்தில் தொடங்கப்பட உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Flipkart Big Billion Days sale: இந்த ஐபோன்களுக்கு அதிரடி ஆஃபர்.. மற்றும் பல!

Flipkart Big Billion Days எனப்படும் மெகா ஷாப்பிங் திருவிழா இந்த மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. இந்த மாத இறுதியில் விற்பனை தொடங்க உள்ளது. தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை என்றாலும் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்குகிறது என தகவல் வெளியாகி உள்ளது. 23ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ஆம் தேதி வரை தள்ளுபடி விற்பனை செய்யப்பட உள்ளது. அமேசான் நிறுவனமும் தனது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஷாப்பிங் திருவிழாவை இதே நேரத்தில் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்தமுறை iPhone 13 மற்றும் iPhone 12 போன்களில் சலுகைகள், தள்ளுபடிகள் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. பிளிப்கார்ட் தள்ளுபடிகளுடன் வங்கி சலுகைகளையும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஐசிஐசிஐ வங்கி கணக்கு, ஆக்சிஸ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களில் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதோடு, No-cost EMI, ஸ்மார்ட்போன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் வழங்கப்பட உள்ளது.

ஐபோனுடன், ரியல்மி, போகோ, விவோ, ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற ஸ்மார்ட்போன்களுக்கும் பிளிப்கார்ட் தள்ளுபடி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ், ஆக்சஸரீஸ், டிவி மற்றும் அப்ளையன்ஸ் ஆகியவற்றில் 80% வரை தள்ளுபடி வழங்கப்படலாம்.

செப்டம்பர் 7ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14ஐ அறிமுகப்படுத்துகிறது. அதனால் இம்முறை ஐபோன் 13 மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. ஐபோன் 14 அறிமுகப்படுத்தப்பட உள்ளதால், முந்தைய மாடலான ஐபோன் 13 மற்றும் ஐபோன் 12 விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளிப்கார்ட் தற்போது ஐபோன் 13 ரூ.69,999-க்கு விற்பனை செய்கிறது. பழைய போன் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளுக்கு ரூ.19,999 வழங்குகிறது. ஆனால் முழுமையாக ரூ.19,000 கிடைக்குமா என உறுதியாக கூற முடியாது. உங்கள் பழைய போனின் நிலை, விலை பொறுத்து சலுமை வழங்கப்படும். iPhone 11, iPhone 12 குறைந்த விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment