Advertisment

5 Whatsapp Tricks : ஒரு குறிப்பிட்ட சாட்டில் இருந்து வரும் மீடியாக்களை மட்டும் மறைப்பது எப்படி?

அதனை நீங்கள் க்ளிக் செய்து தேவையற்ற மீடியாக்களை டெலிட் செய்து கொள்ளலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
WhatsApp breach, Israeli spyware pegasus, Pegasus spy case india,

WhatsApp breach, Israeli spyware pegasus, Pegasus spy case india,

Five Whatsapp tricks tips for android you should know :  வாட்ஸ் ஆப் பயன்படுத்தும் அன்பான பயனாளர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான ட்ரிக்குகள் 5 உங்களுக்காக இதோ. இதை நீங்கள் பயன்படுத்தினால் ஏற்கனவே இருக்கும் பாதுகாப்பு அம்சங்களுடன் உங்கள் ரகசியம் மிக பத்திரமாக இருக்கும்.

Advertisment

வீடியோ மற்றும் புகைப்படங்களை கேலரியில் சேமிக்காமல் மறைப்பது எப்படி?

ஒரு க்ரூப் அல்லது சாட்டில் மீடியா அனுப்பப்பட்டால் அது நேரடியாக உங்கள் கேலரியில் சேமிக்கப்பட்டுவிடும். ஆனால் சில புகைப்படங்களை கேலரியில் இருந்து மறைக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இதோ இந்த ட்ரிக்.

Go to a chat > tap on group/contact name > tap on Media Visibility > tap on “No”

ஒரு குறிப்பிட்ட நபரிடம் இருந்து வரும் அனைத்து மீடியாக்களையும் எப்படி டெலிட் செய்வது?

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ட்ரிக்கை நீங்கள் பயன்படுத்தினால் ஒரு குறிப்பிட்ட சாட்டில் இருக்கும் மீடியா ஃபைல்கள் அனைத்தையும் உங்களால் டெலிட் செய்ய இயலும். ஸ்டிக்கர்கள், ஜிஃப்கள், மற்றும் புகைப்படங்கள் என அனைத்து மீடியாக்களையும் டெலிட் செய்ய WhatsApp Settings > Data and storage usage > Storage usage செல்லவும். பின்னர் மீடியா ஸ்டோரேஜூக்கு ஏற்ற மாதிரியாக காண்டாக்ட்டுகள் இருக்கும். அதனை நீங்கள் க்ளிக் செய்து தேவையற்ற மீடியாக்களை டெலிட் செய்து கொள்ளலாம்.

Limit data used by WhatsApp

கட்டுப்படுத்த உங்களால் இயலும். அப்படி செய்யும் போது நீங்கள் எந்த வகையான மீடியாவை டவுன்லோட் செய்ய விரும்புகிறீர்கள் என்ற விருப்பத்தேர்வை உங்களுக்கு காட்டும். அதன்படி நீங்கள் போட்டோக்கள், வீடியோக்கள், ஆடியோக்கள், டாக்குமெண்ட்கள் உங்களின் விருப்பப்படி டவுன்லோடு செய்து கொள்ளலாம். பின்பு உங்களின் டேட்டாவை மிச்சப்படுத்திக் கொள்ளலாம்.

Share Live Location for 8 hours

வாட்ஸ்ஆப்பில் பயன்படுத்தப்படும் டேட்டாவின் அளவை எட்டு மணி நேரம் லைவ் லோகேசனை ஷேர் செய்யுங்கள்.  நீங்கள் எங்காவது வெளியூர் செல்கின்றீர்களா? தெரியாத இடத்தில் இருந்து உங்களின் இருப்பை குறித்த தகவல்களை உடனுக்குடன் உங்களின் நெருங்கிய நட்பு வட்டத்தினருக்கு அளிக்க இயலும். நீங்கள் அதற்காக Go to chat > tap on attachment > select location - இதை தேர்வு செய்தவுடன், ஷேர் லைவ் லொகேசன் என்ற ஆப்சன் மூலம் நீங்கள் 8 மணி நேரம் உங்கள் லைவ் லொகேசனை ஷேர் செய்யலாம்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Transfer files between PC and phone

உங்களின் ஸ்மார்ட்போனுக்கும் கணினிக்கும் இடையே உங்களால் டேட்டாவை ஷேர் செய்து கொள்ளலாம். வாட்ஸ்ஆப் வெப் மூலமாக நீங்கள் வாட்ஸ்ஆப்பினை பி.சியில் பயன்படுத்தலாம். நீங்கள் பி.சியில் இருந்து நேரடியாக வாட்ஸாப்பில் மீடியாக்களை செண்ட் செய்து கொள்ளலாம் அல்லது நீங்கள் வாட்ஸ்ஆப்பை பி.சியில் டவுன்லோட் செய்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Whatsapp Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment