பிளிப்கார்டு ‘பிக் ஷாப்பிங் டேஸ்’: ஆப்பிள் முதல் ஆண்ட்ராய்டு வரை அள்ளிக்குவிந்த ஆஃபர்கள்

மின்சாதன பொருட்கள், ஃபேஷன், லைஃப்ஸ்டைல், தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு வகையிலான பொருட்மள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஃபிளிப்கார்ட் வரும் 7 முதல் 9-ஆம் தேதி வரை ’பிக் ஷாப்பிங் டேஸ்’ விற்பனையை அறிவித்துள்ளது. மொபைல், டேப், மின்சாதன பொருட்கள், ஃபேஷன், லைஃப்ஸ்டைல், தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு வகையிலான பொருட்மள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஆப்பிள் ஐஃபோன் எக்ஸ், கூகுள் பிக்சல் 2, சாம்சங் கேலக்ஸி எஸ் 7, சயோமி எம்.ஐ. ஏ1 உள்ளிட்ட பல மொபைல்களுக்கு ஆஃபர் வழங்கப்பட உள்ளது. மேலும், மோட்டோ சி பிளஸ், ஆப்பிள் ஐஃபோன் 7, மோட்டோ ஜி5 பிளஸ், ஹானர் 9 ஐ உள்ளிட்ட ஸ்மார்ட்ஃபோன்களுக்கு தள்ளுபடி விலை அறிவிக்கப்பட உள்ளது.

ஆப்பிள் ஐஃபோன் எக்ஸ்:

ஆப்பிள் ஐஃபோன் எக்ஸ் ரூ.1,02,000-க்கு விற்பனையான நிலையில், ரூ.89,000க்கு இந்த பிக் சேலில் விற்பனையாக உள்ளது. இதுதவிர, எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.18,000 தள்ளுபடி, எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டுகளில் ரூ.5,000 உடனடி தள்ளுபடி, ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளில் 5 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஈ.எம்.ஐ. முறையில் பணம் செலுத்தவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் 2:

கூகுள் பிக்சல் 2 ஒரிஜினல் விலை ரூ.61,000 என்ற நிலையில், 18 சதவீத தள்ளுபடியுடன் ரூ.49,999க்கு விற்பனை செய்யப்படும்.

இதுதவிர பல ஆஃபர்களும் இந்த ’பிக் ஷாப்பிங் டேஸில்’ உள்ளது.

×Close
×Close