'ட்ரோனில்’ தான் இனி சாப்பாடு டெலிவரி... அனுமதிக்காக காத்திருக்கும் ஸோமாட்டோ!

Zomato Online Food Delivery : ஆளில்லா விமானங்களை இயக்க இந்தியாவில் தடை இருப்பதால், புதிய விதிமுறைகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது ஸோமாட்டோ. 

Pranav Mukul

Food Tech Platform Zomato has Idea of delivering food by drones : இன்றைய அன்றாட வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்தில் பெரும் பங்கு வகிக்கிறது ஆன்லைன் புக்கிங், மற்றும் டோர் டெலிவரி சிஸ்டம். உணவுத் துறையும், உணவகங்களும் இதற்கு விதி விலக்கல்ல.

இரண்டு மூன்று வருடங்களுக்குள் ஸ்விக்கி, ஸோமட்டோ மற்றும் உபர் ஈட்ஸ் வளர்ந்த விதம் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. எந்த நிறுவனம் மிகவும் விரைவாக உணவினை வழங்குகிறது என்பதில் மிகவும் போட்டி நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய விரைந்து செயல்பட்டு வருகிறது. ஸோமாட்டோ ஏற்கனவே ட்ரோன் எனப்படும் ஆளில்லா தனியங்கி குட்டி விமானங்கள் மூலமாக உணவினை டெலிவரி செய்யும் திட்டத்திற்கு தங்களை தயார் செய்து வருகிறது. ட்ரோன்கள் எல்லாம் தயாரிக்கப்பட்ட நிலையில், ஆளில்லா விமானங்களை இயக்க இந்தியாவில் தடை இருப்பதால், புதிய விதிமுறைகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது ஸோமாட்டோ.

மேலும் படிக்க : இ.எஸ்.ஐ பங்களிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

ட்ரோனுக்கான தடையும் புதிய விதிமுறைகளும்

வானில் ட்ரோன்கள் பறப்பதற்கான சில முக்கியமான விதிமுறைகளை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் டி.ஜி.சி.ஏ வெளியிட்டது. ( Directorate General of Civil Aviation (DGCA)). இந்த விதிமுறைகளை கட்டமைப்பதற்கு முன்பாக, மும்பையை சேர்ந்த பீட்சா டெலிவரி செய்யும் நிறுவனம் தங்கள் ட்ரோன் மூலம் சோதனை முயற்சியில் ஈடுபட்டனர். இதனை தடுத்ததுடன் 2014ம் ஆண்டில் இருந்து ட்ரோன்களுக்கு தடையும் விதித்தது. அளவுக்கு அதிகமான எடை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதோடு, பார்வைக்கு அப்பாலான உயரத்தில் ட்ரான்கள் பறப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றும் அந்த அறிக்கையில் விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன.

புதிது புதிதாக தொழில்நுட்பங்கள் உருவாகும் போது, இந்த விதிமுறைகள் தளர்வுகள் அல்லது மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் அறிவித்தது அரசு. கடந்த மாதம், புதிய ஆளில்லா விமானங்கள் மூலமாக டெலிவரி செய்ய விரும்பும் கம்பெனிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. மேலும் பார்வைக்கெட்டிய தொலைவில் விமானங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சோதனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஸோமாட்டோ பயன்படுத்தும் நுட்பம் என்ன?

ஸோமாட்டோ உருவாக்கி வைத்திருக்கும் ட்ரோன் ஹைப்ரிட் வகையை சார்ந்ததாகும். இதில் சுற்றும் வகையில்லாத, இயல்பான, விமானங்களுக்கு பொருத்தப்படும் இறக்கைகள் போன்ற ரெக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. நேராக தரையிரங்குவதற்கு ஏற்ற வகையில் ரோட்டர்கள் (Rotors) பொருத்தப்பட்டுள்ளது.

டெக்ஈகிள் இன்னோவேசன்ஸ் (TechEagle Innovations) என்ற நிறுவனம் இந்த ட்ரோனை உருவாக்கியுள்ளது. கடந்த வருடம் இந்த ட்ரோனை தன்வசப்படுத்தியுள்ளது ஸோமாட்டோ. வெறும் 10 நிமிடங்களில் 5 கி.மீ தூரம் வரை இது பயணித்து மிகவும் வேகமான சாப்பாட்டு டெலிவரியை இது உறுதி செய்யும்.  மிக அதிகப்படியான வேகத்தில் இயக்கினால், ஒரு மணி நேரத்திற்கு 80 கி.மீ வேகம் வரை பயணிக்கும். 5 கிலோ எடையை அசால்ட்டாக எடுத்துச் செல்கிறது இந்த ட்ரோன்.

இந்த ட்ரோனில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள் மற்றும் ப்ரோசசிங் யூனிட், ட்ரோனிற்கு முன்னால் அசையும் அல்லது அசைவற்ற தடைகளை எளிதாக உணர முடியும். அனைத்து ட்ரோன்களும் தானாக இயங்கக் கூடியவை. அதே போன்று ஒவ்வொரு ட்ரோனும் ரிமோட் பைலட் சூப்பர்விசன் மூலமாக சோதனையும் செய்து பார்க்கப்பட்டுள்ளது.

ஏன் ட்ரோன்கள் மூலமாக உணவு டெலிவரி ?

மோட்டர் சைக்கிளில் சென்று ஒரு உணவை டெலிவரி செய்ய 30.5 நிமிடங்கள் சராசரியாக எடுத்துக் கொள்கிறது ஸோமாட்டோ சேவை. இந்த நேர அளவை 15 நிமிடங்களாக குறைக்கவே புதிய டெக்னாலஜி பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பான, முறையே வேகமாக உணவினை டெலிவரி செய்ய நாங்கள் நிறைய விவாதித்து இந்த திட்டத்தை கையில் எடுத்தோம். மிக விரையில் இந்த டெலிவரி நடைமுறைக்கு வருமென ஸோமாட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து அதிகரித்து வரும் நகர்மயமாக்கல் மத்தியில் உணவு தேவைகளுக்காக அதிக அளவு வாகனங்களை பயன்படுத்தி ட்ராஃபிக்கை உருவாக்க வேண்டாம் என்று நினைக்கிறது இந்நிறுவனம். அதற்கு மாற்றாகவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் அறிவித்துள்ளது ஸோமாட்டோ. உணவுகளை உணவகங்களில் எடுத்து வரும் ட்ரோன், மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியின் ஹப்பில் உணவினை டெலிவரி செய்துவிடும்.

தற்போது ஸோமாட்டோவிற்கு போட்டியாக களத்தில் நிற்பவர்கள் யார் ?

ஏற்கனவே அமேசான் இந்த ட்ரோன் டெலிவரி குறித்து ஆலோசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில மாதங்களில் நடமுறைக்கு ட்ரோன் பயன்பாடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  உபர்ஈட்ஸ் நிறுவனமும் ரிமோட் பைலட் சர்வீஸை விரைவில் கொண்டு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close